AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்… – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு

தேமுதிக தலைமை கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து பேசியதாவது, நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடுதேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார் என்றார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்… – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
முதல்வர் விஜய் - பிரேமலதா விஜயகாந்த்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 May 2026 15:45 PM IST

சென்னை, மே 31 : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மே 31, 2026 அன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இது யாரும் எதிர்பாராத தேர்தல் முடிவு, நிர்வாகிகளாகிய நீங்கள் தேர்ந்தெடுத்த கூட்டணியில் தொடற்கிறோம். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம் தான். யாரை தீய சக்தி என்று சொன்னார்களோ அவர்கலின் ஆதரவோடு தான் அவர்கள் இன்று ஆட்சி அமைத்துள்ளார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர், புதிய கட்சிக்கு 6 மாத கால அவகாசம் தர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இன்று அந்த நிலைமை இல்லை. தேமுதிக பணத்திற்காகவும் சோஃபா செட்டிற்காகவும் ஆசைப்படாத கட்சி. தேமுதிக கூட்டணிக்கு உண்மையாக இருக்கிறது. அமைச்சர் பதவிக்காக சிலர் ஓடுகின்றனர். ஆனால் நாம் நினைத்திருந்தால் விஜய்யை பார்த்திருக்க முடியாதா? நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடுதேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார் என்றார்.

இதையும் படிக்க : பெண்களுக்கு ரூ.2500 எப்போது? அமைச்சர் மரிய வில்சன் பதில்

மேலும் பேசிய அவர், அதிமுக எம்எல்ஏகள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது. தற்போது நடக்கும் அவலங்களைப் பட்டியலிட்டால் ஒருநாள் போதாது. குறுகிய காலத்தில் தமிழ்நாடு மக்கள் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். தேமுதிகவுக்கு அதிமுக செய்த கொடுமைக்கான பலன் இன்று தவெக மூலம் அக்கட்சிக்கு கிடைக்கிறது” என்றார்.

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

 

இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க, குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனைகளை வழங்கி, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இதையும் படிக்க : அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசும் தவெக அரசு.. குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் எடப்பாடி தரப்பு பரபரப்பு புகார்!

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தினந்தோறும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, கல்வி, தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளை பெரிதும் பாதித்து வருகிறது. இதனால் பொதுமக்களிடையே அதிருப்தியும், கவலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுத்து, தடையற்ற மற்றும் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us