பெண்களுக்கு ரூ.2500 எப்போது? அமைச்சர் மரிய வில்சன் பதில்
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனிடம் பெண்களுக்கு மாதம் ரூ.2500 திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து தெரிய வரும் என்றார். மேலும் ஆர்பிஐ அறிவுறுத்தலின்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை, மே 30 : விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யப்படுவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஆட்சியில் படிப்படியாக தவணை முறையில் நிறைவேற்றப்பட்டது. தவெக ஆட்சியில் ஆர்பிஐ அறிவுறுத்தலின்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்களுக்கு ரூ.2500 எப்போது?
புதுச்சேரி கூடைப்பந்து சங்கம் சார்பில் நடைபெற்ற 76வது ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்கலை சந்தித்த அவரிடம் தவெக அளித்த பெண்களுக்கு ரூ.2500 வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து தெரிய வரும் என்றார்.
இதையும் படிக்க : பயணிகள் கவனத்திற்கு! ஜூன் 1 முதல் சென்னை புறநகர் ரயில்களுக்கு புதிய டைமிங்..




மேலும் பேசிய அவர், இரண்டு வாரத்தில் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வெள்ளை அறிக்கை பல விஷயங்களை சொல்லக் கூடியதாக இருக்கும். முதல்வரின் ஆலோசனைப் படி அறிக்கையை நிதித்துறை குழுவினர் தயார் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து விளக்கம்
மேலும் பேசிய அவர் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அதிமுக ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டது என்றார்.
இதையும் படிக்க : மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஒரே வாரத்தில் மீண்டும் திறப்பு.. தவெக பெயரைப் பயன்படுத்தி முறைகேடு?
மேலும் முதல்வர் விஜய் அறிவித்ததை போல தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். மேலும் திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டம் கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். மேலும் அவரிடம் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் விஜய்யின் சந்திப்பு மரபுமுறை சார்ந்தது. முதன்முரையாக தமிழக முதல்வராகியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் அவர் பிரதமரை சந்தித்துள்ளார் என்றார்.