பைக் vs ஸ்கூட்டி: மைலேஜில் இரண்டுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்? உண்மை என்ன?
பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய இரண்டுமே பொதுவாகச் சிறிய இன்ஜின்களைக் கொண்டிருப்பதோடு, ஒரே மாதிரியான பயன்பாட்டிற்கே உபயோகப்படுத்தப்படுகின்றன. அப்படியிருந்தும், ஸ்கூட்டர்கள் ஏன் பைக்கை விட அதிக பெட்ரோலை பயன்படுத்துகிறது என பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். அது குறித்து இந்த கட்டுரையில விரிவாக பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், பலர் தங்கள் அன்றாடப் பயணங்களுக்கு பைக்கை விட ஸ்கூட்டரையே அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக நகர்ப்புறங்களில் ஸ்கூட்டர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.டிராஃபிக்கில் கியர் பைக்கை விட ஸ்கூட்டரை ஓட்டுவது மிகவும் எளிது என்பதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், போக்குவரத்து நெரிசலுக்கு இடையே ஸ்கூட்டரில் பயணிப்பது பொதுவாக எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். இருப்பினும், மைலேஜ் என்று வரும்போது, பைக்கை விட ஸ்கூட்டருக்கு அதிக பெட்ரோல் செலவாவதுடன் குறைவான மைலேஜையே தருகிறது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், மைலேஜில் இத்தகைய வித்தியாசம் ஏற்படக் காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய இரண்டுமே பொதுவாகச் சிறிய இன்ஜின்களைக் கொண்டிருப்பதோடு, ஒரே மாதிரியான பயன்பாட்டிற்கே உபயோகப்படுத்தப்படுகின்றன. அப்படியிருந்தும், ஸ்கூட்டர்கள் ஏன் பைக்கை விட அதிக பெட்ரோலை பயன்படுத்துகிறது என பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம் இதற்குப் பல தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு சார்ந்த காரணங்கள் உள்ளன. இன்ஜினின் செயல்பாடு முதல் எடை மற்றும் டயர் என ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால்தான், பொதுவாகப் பார்க்கும்போது, ஸ்கூட்டர்களை விடப் பைக்குகளே அதிக எரிபொருள் சிக்கனத்துடன் விளங்குகின்றன.
இதையும் படிக்க : எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில் அறிமுகம்?.. ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை?




இன்ஜினில் உள்ள வித்தியாசம் என்ன?
பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு இடையிலான எரிபொருள் பயன்பாடு மாறுபடுவதற்கு காரணம் அவற்றின் இன்ஜின்களும் கியர் அமைப்புகள் மிக முக்கிய காரணம். பெரும்பாலான பைக்குகள் மேனுவல் கியர் அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த அம்சம், ஓட்டுநர் தனது தேவைக்கேற்ப வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். இது இன்ஜின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, எரிபொருளைச் சேமிக்க உதவுகிறது.
இதற்கு மாறாக, ஸ்கூட்டர்கள் ஆட்டோமேட்டிக் கியர் அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த அமைப்பு இன்ஜின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் இதன் ஒரு காரணமாக, ஸ்கூட்டர்கள் பொதுவாக அதிக எரிபொருளை பயன்படுத்துகின்றன. மேலும், ஸ்கூட்டர்களின் சக்கரங்கள் சிறியதாக இருப்பதால், அதன் இன்ஜின் அதிகப்படியான பவரை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குறிப்பாக டிராஃபிக்கில், அடிக்கடி பிரேக் பிடிப்பது, திடீரென ஸ்பீடை அதிகரிப்பது போன்ற காரணங்களால் ஸ்கூட்டரின் எரிபொருள் செயல்திறனை மேலும் குறைத்துவிடுகின்றன. இதன் விளைவாக, நீண்ட தூரப் பயணங்களுக்கு ஒரு பைக் மிகவும் சிக்கனமான தேர்வாக அமைகிறது.
ஒரு ஸ்கூட்டர் எடையில் குறைவாக இருப்பதாகத் தோன்றினாலும், அதன் எடை விநியோகம் மற்றும் உடல் அமைப்பு ஆகியவை ஒரு மோட்டார்சைக்கிளிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன. இன்ஜின் பின்புறத்தில் அமைந்திருப்பதால், ஆற்றல் வழங்கப்படும் விதம் மாற்றமடைகிறது. மேலும், ஸ்கூட்டரின் டயர்கள் சிறியதாக இருப்பதால், அதிகமாக சுழல வேண்டியிருக்கிறது. இது இன்ஜினை கடினமாக உழைக்கச் செய்கிறது, இதன் விளைவாக அதிக எரிபொருள் நுகர்வு ஏற்படுகிறது.
இதையும் படிக்க : ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு விலை உயர்வு
பைக்கில் பெரிய டயர்கள் அது காற்றை மிக வேகமாக கிழித்துக்கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. இது சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்கு வழிவகுக்கிறது. ஓட்டும் பாணியும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது; ஒரு ஸ்கூட்டரை அதிக வேகத்தில் அடிக்கடி பிரேக் போட்டு ஓட்டினால், அதன் எரிபொருள் திறன் வேகமாக குறையும். எனவே, நல்ல மைலேஜை விரும்புபவர்கள், சீரான வேகம் சரியான டயர் அழுத்தம் மற்றும் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்தல் போன்ற காரணிகளில் நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும்.