கோவை சிறுமி வழக்கு – கைதான கார்த்தி கைதிகள் தாக்கியதில் படுகாயம் – மருத்துவமனையில் அனுமதி
கோவை சிறுமி வழக்கில் கைதான கார்த்தியை, சிறையில் சக கைதிகள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படுகாயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை, மே 30 : கோவை சூலூர் அருகே சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான கார்த்தி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மத்திய சிறையில் கடந்த மே 28, 2026 அன்று அவர் அடைக்கப்பட்ட நிலையில், கார்த்தியை சக பயணிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை கோவை அரசு மருத்துமனையில் காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான கார்த்தி கைதிகள் தாக்கியதில் படுகாயம்
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி காணாமல் போன நிலையில், அருகில் உள்ள குளத்தில் அந்த பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதில் சிறுமியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி பைக்கில் அழைத்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை காவல்துறையினர் பிடித்தனர்.
இதையும் படிக்க : “உன் அப்பன் சாகுறத பாரு”.. மகள் கண் முன்னே துடிதுடிக்க கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்!!




இந்த வழக்கில் குற்றத்தை மறைக்க கார்த்திக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைது செய்தனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி பெற்றோருடன் இணைந்து குழந்தையை தேடுவது போல நடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரையும் தற்காலிகமாக கோவை மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் தாய் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், தனக்கு தெரியாமலேயே தனது கணவர் குடும்பத்தினர் தனது மகளின் உடலை எரித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், ரகசியமாக விசாரிக்க வேண்டிய வழக்கில் குடும்பத்தினர் விவரங்கள் அனைத்தும் செய்திகளில் வெளியாகின. அதனால் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை ஊடகங்களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதையும் படிக்க : மர்ம காய்ச்சலுக்கு பச்சிளம் குழந்தை பலி.. தூத்துக்குடியில் நிகழ்ந்த சோகம்.. பீதியில் பொது மக்கள்!
இந்த நிலையில் தான் கோவை மத்திய சிறையில் சக சிறைவாசிகள் தாக்கியதில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.