அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிற்குச் சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனத்தின் ‘நியூ க்ளென்’ ராக்கெட், புளோரிடாவில் நடைபெற்ற சோதனையின்போது பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்து ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனத்திற்கும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டிருந்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.