IPL 2026: ஒற்றை ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர்.. கோப்பையை வெல்ல பெங்களூருவுக்கு 156 ரன்கள் இலக்கு!
முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இருப்பினும், வாஷிங்டன் சுந்தர் போராடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்,. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 மே 31ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இருப்பினும், வாஷிங்டன் சுந்தர் போராடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
ALSO READ: கொட்டப்போகும் பண மழை! ஐபிஎல் 2026ல் கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா?




முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட குஜராத் அணி, தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்றில் சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில், இந்த போட்டியில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, குஜராத் டைட்டன்ஸ் அணி ஸ்கோர் 22 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. இதற்குப் பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணி 26 ரன்களில் இரண்டாவது விக்கெட்டையும், 55 ரன்களில் மூன்றாவது விக்கெட்டையும், 73 ரன்களில் நான்காவது விக்கெட்டையும், 99 ரன்களில் ஐந்தாவது விக்கெட்டையும், 115 ரன்களில் ஆறாவது விக்கெட்டையும், 142 ரன்களில் ஏழாவது விக்கெட்டையும், 151 ரன்களில் எட்டாவது விக்கெட்டையும் சந்தித்தது.
மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய வாஷிங்டன் சுந்தரைத் தவிர, சாய் சுதர்ஷன் 12 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களும், நிஷாந்த் சிந்து 20 ரன்களும், ஜோஸ் பட்லர் 19 ரன்களும், அர்ஷத் கான் 15 ரன்களும், ராகுல் தெவாடியா 7 ரன்களும், ரஷித் கான் 7 ரன்களும் மற்றும் ககிசோ ரபாடா 3* ரன்களும் அணிக்காக எடுத்தனர்.
2வது முறை சாம்பியன் பட்டத்தை வெல்லுமா பெங்களூரு?
Innings Break!
Washington Sundar fights back but an all-round effort from #RCB restricts #GT to 1️⃣5️⃣5️⃣
Scorecard ▶️ https://t.co/Yz6K3q6w0X#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/1nMfBYvg1D
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
தொடர்ச்சியாக 2வது பட்டத்தை வெல்லும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூரு அணி தங்களது இரண்டாவது தொடர்ச்சியான பட்டத்தை வெல்ல முனையும் என்பது வெளிப்படை. ஆர்சிபி அணி தனது முதல் பட்டத்தை கடந்த 2025-ஆம் ஆண்டு சீசனில் வென்றது. இப்போது, கேப்டன் ரஜத் பதிதார் தலைமையின் கீழ், பெங்களூரு அணி தங்களது இரண்டாவது தொடர்ச்சியான பட்டத்தை வெல்ல முடியும். தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல பெங்களூரு அணி 156 ரன்கள் எடுக்க வேண்டும். இலக்கை விரட்டும் போது அணி எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
ALSO READ: ஐபிஎல் கோப்பையில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருத வாசகம்.. அதன் அர்த்தம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குப் பிறகு, தொடர்ச்சியாக இரண்டு கோப்பைகளை வென்ற மூன்றாவது அணியாக பெங்களூரு திகழும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. சென்னை அணி 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோப்பைகளை வென்றது. மும்பை அணி 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்தது.