கோவையில் தனியார் தியேட்டரில் திடீர் கலாட்டா.. பொதுமக்களிடம் உரிமையாளர்கள் – ஊழியர்கள் கடும் வாக்குவாதம்!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் தியேட்டரில் கழிவறை சுத்தமாக இல்லாததா வீடியோவாக பதிவு செய்த பொது மக்களுடன் தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கில் வைரகி வருகிறது .
கோயம்புத்தூர், கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் திரையரங்கு செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் கழிவறை சுத்தமாக இல்லை எனக் கூறி வீடியோ பதிவு செய்த நபரை திரையரங்கின் ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த திரையரங்கில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் இடைவேளையின் போது தியேட்டர் வளாகத்தில் உள்ள பொது கழிவறையே பயன்படுத்துவதற்காக சென்றிருந்தனர். இதில், அந்த கழிவறை சுத்தம் செய்யப்படாமல் மிகவும் அசுத்தமான முறையில், துர்நாற்றம் வீசி காணப்பட்டது. இதை பார்த்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட முயன்றார். இது குறித்து தகவல் அறிந்த திரையரங்கின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுடன் தியேட்டர் ஊழியர்கள் வாக்குவாதம்
அப்போது, தியேட்டரில் படம் பார்ப்பதற்கான டிக்கெட் கட்டணத்தை முறையாக வசூல் செய்கிறீர்கள். ஆனால், தியேட்டருக்கு படம் பார்க்க வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை எவ்வித பராமரிப்பும் இன்றி அசுத்தமான முறையில் உள்ளது. அதனை சுத்தம் செய்யவில்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதில், தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரது செல்போனை பறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!




தியேட்டர் மேலாளரை முற்றுகையிட்ட மக்கள்
இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கழிவறை அசுத்தமாக இருப்பதை சுட்டி காட்டிய நபர் மீது தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தாக்குதல் நடத்துவதை பார்க்க மற்ற பார்வையாளர்கள் உடனடியாக தாக்குதல் ஈடுபட்ட ஊழியர்களை சுற்றி வளைத்ததுடன் தியேட்டர் மேலாளர் முற்றுகையிட்டு பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை ஈடுபட்டனர்.
சமூகவலைதளங்களில் வீடியோ காட்சிகள் வைரல்
இதைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். தனியார் தியேட்டரில் கழிவறை சுத்தமாக இல்லாததை தட்டி கேட்ட பொது மக்களை தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகளாக பரவி வருகிறது. இந்த திடீர் வாக்கு வாதத்தால் தியேட்டர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா? அவரே அளித்த பரபரப்பு விளக்கம்