AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா? அவரே அளித்த பரபரப்பு விளக்கம்

Vck Leader Thol Thirumavalavan: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப்போவதாக எழுந்த பல்வேறு கருத்துக்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜயிடமும் தெரிவித்தகாக கூறியுள்ளார்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா? அவரே அளித்த பரபரப்பு விளக்கம்
திருமாவளவன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Jun 2026 10:17 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையான தொகுதிகள் இல்லாத காரணத்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிடுகிறாரா

இந்த தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், திருச்சி கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை. இந்த கருத்தை முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெளிவுபடுத்தி உள்ளேன். தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் படிக்க: கோடை விடுமுறை நிறைவு.. கோவை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

100  சதவீதம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை

ஆனால், அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனவே, 100 சதவீதம் நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவது கிடையாது. தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றால் தான் இந்த ஆட்சிக்கு பாதுகாப்பு என அந்தக் கட்சியினர் கருதியதன் அடிப்படையில் தான் தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றது என்று தெரிவித்தார். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திருச்சி கிழக்கில் போட்டியிடுவது யார்

இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடப் போவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 5 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தொல். திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இந்தியாவின் பணக்கார சிஎம்.. முதல் 3 இடத்தில் யார் தெரியுமா? விஜய்க்கு எந்த இடம்?

Follow Us