AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!

Kanimozhi MP Criticizes CM Vijay: தூத்துக்குடியில் தவக நிர்வாகிகள் இருவரால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் விஜய் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து எப்பதோ பொறுப்படன் செயல்பட போகிறார் என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!
முதல்வர் மீது கன்மொழி விமர்சனம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Jun 2026 08:53 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியை சேர்ந்த பெண்ணை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் இருவர் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியானது. இதில், தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் இவரது நண்பரும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியுமான இராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், அந்தப் பெண்ணுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இந்த சம்பவத்தை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

முதல்வர் எப்போது பொறுப்புடன் செயல்பட போகிறார்

இது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பெறும் கேள்விக்குள்ளாகி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் தேர்தல் காலத்தைப் போல திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து எப்போது பொறுப்புடன் செயல்பட போகிறார் என்று அந்தப் பதிவில் கனிமொழி எம். பி. தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அதிமுக பிளவால் மனம் பொறுக்கவில்லை.. உலகை விட்டே போகிறேன்.. தஞ்சாவூர் நிர்வாகி தீக்குளித்த தற்கொலை!

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் பின்னணி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியை சேர்ந்த பெண்ணும், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் என்பவரும் தெரிந்த நபர்கள் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், பாலமுருகனிடம் அந்தப் பெண் தனக்கு வேலை வாங்கித் தருமாறு கூறியதாக தெரிகிறது. அதன்படி, அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக பாலமுருகன் உறுதி அளித்துள்ளார். அத்துடன், வேலை தொடர்பாக பேசுவதற்காக தனது காரில் தன்னுடன் வருமாறு அந்த பெண்ணிடம் கூறி அழைத்து சென்றுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் பாலமுருகன் உடன் காரில் சென்றுள்ளார்.

தவெக நிர்வாகிகள் பாளை சிறையில் அடைப்பு

அப்போது, அதே காரில் பாலமுருகனின் நண்பரான ஜெயபாலும் உடன் சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் வழியில் ஏற்கனவே மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து குடிக்குமாறு கூறியுள்ளனர். அதனை அந்த பெண் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார். இதை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் இரு நிர்வாகிகளும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இந்தியாவின் பணக்கார சிஎம்.. முதல் 3 இடத்தில் யார் தெரியுமா? விஜய்க்கு எந்த இடம்?

Follow Us