AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் – வெளியான தகவல்

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் விலகல் கடிதம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த சில நாட்களாக அவர் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் – வெளியான தகவல்
அண்ணாமலை
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Jun 2026 15:31 PM IST

சென்னை, ஜூன் 2 : முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் 4 பக்க விலகல் கடிதம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் ஜூன் 2, 2026 அன்று சந்திக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த சில நாட்களாக அவர் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியுள்ளதாக தகவல்

பாஜகவில் தனக்கென எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகவும் இதனையடுத்து அவர் புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரது ஆதரவாளர்கள் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கும், தனது ஆதரவாளர்கள் சிலருக்கும் அண்ணாமலை வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அதற்கு பாஜக தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனாலும் அவர் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா? அவரே அளித்த பரபரப்பு விளக்கம்

டெல்லிக்கு சென்றுள்ள அண்ணாமலை

 

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்காக அவர் சென்னையில் இருந்து ஜூன் 1, 2026 நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் ஜூன் 2, 2026 இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் தனது 4 பக்க விலகல் கடிதத்தை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் அந்த கடிதத்தில் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மத்திய உள்துறை அமித் ஷாவையும் அவர் சந்தித்க நேரம் கேட்டுள்ளாராம். அவரை சந்தித்து தனது விலகலுக்கான காரணம் குறித்து தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய கட்சி யை தொடங்கவுள்ள அண்ணாமலை தனது கட்சியை ஜூன் 4, 2026 அன்று தனது பிறந்த நாளில் தெரிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கட்சியில் தனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற காரணத்தால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கட்சி தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Follow Us