Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு…. எப்போது? யாருக்கு கிடைக்கும்?

Pongal Gift Update: தமிழக அரசு சார்பில் ரூ.3000 ரொக்கத் தொகை, அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியன அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 4, 2026 அன்று அறிவித்தார். இந்த பரிசுத் தொகை எப்போது? யாருக்கு கிடைக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

3000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு…. எப்போது? யாருக்கு கிடைக்கும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jan 2026 15:50 PM IST

சென்னை, ஜனவரி 4:  பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.3,000 ரொக்கத் தொகை, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் ஜனவரி 4, 2026  முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது.  இது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகை யாருக்கு வழங்கப்படும்?

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய பொங்கல் என்பதால், ரொக்கத் தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 4, 2026 அன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 2 கோடி 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதையும் படிக்க : சிபிஎஸ் vs டேப்ஸ் ஓய்வூதியம்.. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? எதில் பலன் அதிகம்..

முதல்வரின் எக்ஸ் பதிவு

 

இதில், பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் சேர்த்து, ஆண்களுக்கு வேட்டி மற்றும் பெண்களுக்கு சேலை ஆகியவையும் வழங்கப்படும். இதோடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3,000 ரொக்கத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மொத்தம் ரூ.6,936 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எப்போது முதல் வழங்கப்படும்?

பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்கத் தொகை வழங்கும் திட்டத்தை, வரும் ஜனவரி 8, 2026 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 8, 2026 முதல் 14, 2026 வரை, ஏழு நாட்கள் தொடர்ந்து, நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெறும். தினமும் சுமார் 400 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பொங்கல் சிறப்பு ரயில்கள்.. காலை 8 மணிக்கு தொடங்கிய டிக்கெட் முன்பதிவு..

இதனிடையே, ரூ.3,000 பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் ஜனவரி 6, 2026 அன்று தொடங்கியுள்ளது. நியாயவிலைக் கடை ஊழியர்கள், வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கி வருகின்றனர். அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில், அட்டைதாரர்கள் தங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.