அரசியல்வாதிகளுக்கு எதிரான படம்… கலைஞர் கருணாநிதி செய்த விஷயம் – நினைவுகூர்ந்த ரஜினிகாந்த்
Rajinikanth Speaks About Karunanidhi: மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஜனவரி 4, 2026 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட படங்களை பார்த்ததாக பேசினார்.
புகழ்பெற்ற ஏவிஎம் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (AVM Saravanan), கடந்த டிசம்பர் 4, 2025 அன்று காலமானார். இந்த நிலையில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி ஜனவரி 4, 2026 அன்று நடைபெற்றது. தமிழ் திரைப்படத் துறையில் நீண்ட காலமாகச் சேவை செய்ததற்காக, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். மேலும் புதுச்சேரி அரசின் சிகரம் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏவிஎம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏவிஎம் சரவணனின் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார்.
ஏவிஎம் சரவணனின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த ரஜினிகாந்த்
இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஏவிஎம் சரவணனுடன் கொண்டிருந்த தனது நெருங்கிய உறவை நினைவுகூர்ந்தார்.
இதையும் படிக்க : “இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது”.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை




அப்போது பேசிய அவர், ஏவிஎம் சரவணன் எனக்கு சினிமாவில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல வகைகளில் உதவியவர். அவர் ஒரு உண்மையான ஜென்டில்மேன். ராகவேந்திரா கல்யாண மண்டபம் கட்டுவது குறித்து எனக்கு ஆலோசனை வழங்கியவரும் அவர்தான். திரைப்படம் தயாரிக்கும் போதும், வாழ்க்கை தொடர்பான விஷயங்களிலும் அனைத்துக் கோணங்களிலும் யோசித்து முடிவெடுப்பவர் ஏவிஎம் சரவணன்,” என்று அவர் கூறினார்.
கலைஞர் கருணாநிதி குறித்து பேசிய ரஜினிகாந்த்
மேலும் பேசிய அவர், நாம் நேசிக்கும், மதிக்கும் மனிதர்களை காலம் மிக விரைவாக நம்மிடமிருந்து பிரித்துக் கொள்கிறது. ஏவிஎம் சரவணனின் அலுவலகத்திற்குச் சென்றாலே ஒரு நேர்மறையான ஆற்றல் கிடைக்கும். அத்தகைய மனிதரை இழந்தது திரையுலகுக்கு பெரிய இழப்பு,” என ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார். மேலும் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்த படங்கள் குறித்து பேசிய அவர், அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்த சிவாஜி படத்தை கலைஞர் கருணாநிதி பார்த்தது மட்டுமில்லாமல், வெற்றிவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கேடயம் வழங்கினார் என்று பேசினார்.
இதையும் படிக்க : மலேசிய கார் ரேஸ் ஓவர்.. நண்பர்களுடன் கெட்-டூ-கெதர் பார்ட்டியில் அஜித் குமார்!
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழ் திரைப்படத் துறைக்கு ஏவிஎம் சரவணன் செய்த பங்களிப்புகளையும், அவர் பெற்ற மரியாதையையும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது. அவரது நினைவு என்றும் திரையுலகினரின் மனதில் நிலைத்திருக்கும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.