AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை… அதிரடியில் இறங்கிய சிபிஎஸ்இ!

Three Language Policy: சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரு வாரத்துக்குள் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், பல்வேறு புதிய நடைமுறைகள் உள்ளன. அது என்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை… அதிரடியில் இறங்கிய சிபிஎஸ்இ!
ஒரு வாரத்தில மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 10 Apr 2026 12:27 PM IST

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 2026- 2027 ஆம் கல்வியாண்டில் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 6- ஆம் வகுப்பு முதல் மும்மொழி கோள்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதில், 9- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்ப தேர்வான மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மும்மொழி கொள்கையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் அடிப்படையில், மாணவ, மாணவிகள் படிக்கும் 3 மொழிகளில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்தியாவை சேர்ந்தவையாக இருத்தல் வேண்டும். பல்வேறு மொழி சார்ந்த கல்வியை சிபிஎஸ்சி வாரியம் படிப்படியாக செயல்படுத்தி வருவது போல 2026-2027 ஆம் கல்வியாண்டில் 6- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3- ஆவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 2 மொழிகளை கற்பது உறுதி செய்யப்படும்

அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 2 இந்திய மொழிகளை கற்பது உறுதி செய்யப்படும். இந்த நடைமுறையானது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயின்றுவிட்டு இந்தியா திரும்பும் மாணவர்கள் 8 மற்றும் 9- ஆம் வகுப்பு வரை தாங்கள் படித்த 3- ஆவது மொழி உள்நாட்டு பள்ளிகளில் கற்றுத் தராமல் இருக்கும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட உள்ளது. இருந்தாலும் அவர்கள் கல்வி திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த பாடங்களின் எண்ணிக்கையும் முழுமையாக கற்றுக் கொள்வது கட்டாயமாகும் என சிபிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று மழையும் கொட்டும்.. அதிக வெப்பநிலையும் இருக்கும்.. வானிலை எச்சரிக்கை!!

இரு நிலை தேர்வு முறை அறிமுகம்

இதே போல, 9- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இரு நிலை தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பாக சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இதில், முதல் தரநிலை பாடத்திட்டத்தின்படி, 80 மதிப்பெண்களுக்கான 3 மணி நேர பொது தேர்வை அனைத்து மாணவர்களும் கட்டாயம் எழுத வேண்டும். இதில், கூடுதல் திறன் பெற விரும்பும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் அல்லது இரண்டு பாடங்களிலும் அட்வான்ஸ் தேர்வு நிலையை தேர்வு செய்யலாம். இது மாணவர்களுக்கான விருப்ப தேர்வாகும்.

10- ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள்

இதற்காக 25 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்படும். அதில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தொகுப்பு மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படாது. இதற்கு மாறாக 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெரும் மாணவர்களின் வினாத்தாளில் மேம்பட்ட நிலை தகுதி என குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ் 10- ஆம் வகுப்புக்கும் முதல் பொது தேர்வுகள் 2028- ஆம் கல்வியாண்டில் இருந்து நடத்தப்படும் என சிபிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை: கோடைக்கு முன்பே கவலை அளிக்கும் நிலத்தடி நீர்மட்டம்…

Follow Us