AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் எச்சரித்தும் அடங்காத ஆர்வம்.. மீண்டும் விபத்தில் முடிந்த பைக் ஃபாலோயிங்.. தவெக தொண்டர்களுக்கு நேர்ந்த கதி!

Tvk Leader Vijay: காரைக்குடியில் பரப்புரைக்காக சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இரு இளைஞர் ஓட்டிய இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில், பலத்த காயமடைந்த இளைஞர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விஜய் எச்சரித்தும் அடங்காத ஆர்வம்.. மீண்டும் விபத்தில் முடிந்த பைக் ஃபாலோயிங்.. தவெக தொண்டர்களுக்கு நேர்ந்த கதி!
விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த போது விபத்து
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 10 Apr 2026 11:38 AM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து தனது பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அவரது வாகனம் மதுரை மாவட்ட பகுதியில் திருமங்கலம் நெடுஞ்சாலையில் சென்ற போது, விஜயின் வருகைக்காக காத்திருந்த அவரது ஆதரவாளர்களான இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து செல்ல தொடங்கினர். ஒரு கட்டத்தில் விஜயின் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த இளைஞரின் இரு சக்கர வாகனம் திடீரென சாலையில் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த இரு சக்கர வாகனம் சிறிது தூரத்துக்கு சாலையில் தர… தர… வென இழுத்துச் செல்லப்பட்டது. இதை பார்த்த மற்ற இளைஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனையில் பலத்த காயத்துடன் இரு இளைஞர் அனுமதி

ஆனால், அந்த விபத்தை பொருட்படுத்தாது அந்த இளைஞர்கள் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். சில இளைஞர்கள் மட்டும் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, விபத்துக்குள்ளான இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு, பலத்த காயம் அடைந்த அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள செல்லும்போது, அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வர வேண்டாம் என்று கட்சி சார்பில் ஒவ்வொரு பரப்புரை பயணத்தின்போதும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று மழையும் கொட்டும்.. அதிக வெப்பநிலையும் இருக்கும்.. வானிலை எச்சரிக்கை!!

தஞ்சாவூரில் விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு

ஆனால், இந்த அறிவுறுத்தல்களை கட்சியின் தொண்டர்களான இளைஞர்கள் கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் விஜய் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிய போது, அவரது வாகனத்தை திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விக்னேஷ் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றார். அப்போது, சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் பின்பகுதியில் இரு சக்கர வாகனம் பலமாக மோதி, கல்லூரி மாணவர் விக்னேஷ் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்தை உணர்ந்தும் பைக் பாலோயிங்

அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கெனவே கரூரில் எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது, ஆபத்தை உணர்ந்து கொண்டே தவக தலைவர் விஜய்யின் பிரசார வாகனம் பின்னலால் சென்று விபத்தில் சிக்குவதும், உயிரை விடுவதும் சற்று வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் படிக்க: தனியார் மருத்துவக் கல்லூரி மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி.. தற்கொலையா? தற்செயலா? போலீசார் விசாரணை!

Follow Us