AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. விஜய்யின் ஏஐ உருவத்துடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்… தஞ்சாவூரில் விநோதம்!

Tvk Candidate Campaign With Vijay Image: தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உருவத்துடன் அந்த தொகுதியின் வேட்பாளர் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். இது அந்த பகுதி மக்களிடையே வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. விஜய்யின் ஏஐ உருவத்துடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்… தஞ்சாவூரில் விநோதம்!
விஜயின் ஏஐ உருவத்துடன் தவெக வேட்பாளர் பிரசாரம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 13 Apr 2026 10:14 AM IST

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து கட்சி பணி ஆற்றி வருகிறது. இதற்காக, தமிழகத்தில் உள்ள 233 ( எடப்பாடி தொகுதி நீங்கலாக) சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இவர்களுக்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், சில மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு மாவட்ட காவல்துறை மற்றும் தேர்தல் துறை சில காரணங்களை குறிப்பிட்டு அனுமதி மறுத்து வந்தது. அதே வேளையில் சில பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி கிடைத்தாலும், தவெக சார்பில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

விஜய் பிரசாரம் ரத்து – ஏமாற்றத்தில் வேட்பாளர்கள்

அந்த வகையில், வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால், அந்தந்த பகுதிகளில் உள்ள தவெக தொண்டர்கள் மற்றும் தொகுதிகளின் வேட்பாளர்கள் ஆகியோர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால், கட்சியினர் மத்தியில் ஒருவித அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி.. தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி நிதி.. புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு!

செயற்கை நுண்ணறிவு மூலமாக விஜய் உருவம்

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக பரப்புரை செய்ய வராத இடங்களில், அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் ஹாலோகிராம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் புது விதமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அந்த தொகுதியின் வேட்பாளர் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரது வாகனத்தில் செயற்கை நுண்ணறிவு மூலமாக தவெக தலைவர் விஜய் நேரில் பேசுவது போன்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

 

செயற்கை நுண்ணறிவு மூலம் பேசும் விஜய்

அதில், தவெக தலைவர் விஜய் பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்த தமிழக மக்களும் தங்களுடைய ஒற்றை விரலால் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தவகவின் விசில் சின்னத்துக்காக அவர்கள் அழுத்தப் போகிற ஒவ்வொரு பட்டன்களில் இருந்து விழப்போகிற ஒவ்வொரு ஓட்டும் அணு குண்டாக மாறும் என்று பேசுகிறார். இந்த புது வகையான பிரச்சாரம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் சற்று வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் படு வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இதே போல, அவரது உருவ பொம்மைகளுடன் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: தைரியமிருந்தால் கடிதத்தை வெளியிடுங்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!

Follow Us