AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி.. தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி நிதி.. புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு!

Financial Report Released: கடந்த 10 ஆண்டு கால மத்திய பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக ரூ.14 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நிதி விவரத்தை வெளியிட்டுள்ளது. எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கு பதிலாக வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி.. தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி நிதி.. புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு!
தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்த நிதி விவரம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 13 Apr 2026 07:49 AM IST

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. தமிழகத்தை விட பிற மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய பாஜக அரசு கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், என்டிஏ ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.4.01 லட்சம் கோடி வரி பகிர்வு, மானியமாக ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.14,804 கோடி மதிப்பீட்டில் சுமார் 12.66 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.414 கோடி மதிப்பீட்டில்40.98 லட்சம் இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தில் ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பில் சிறு தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் ரூ.12,764 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கிராம சாலைகள் திட்டம் முதல் பயிர் காப்பீடு திட்டம் வரை

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் ரூ.7,722 கொடி சிலை விடப்பட்டுள்ளது. பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டத்தில் 4 லட்சம் வியாபாரிகளுக்கு ரூ.928 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு திட்டத்தின் கீழ் 3.64 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5,621 கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் 1.80 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1,535 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 98 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். ரூ.78,663 கோடி பிரீமியமாக செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இணையத்தில் கசிந்த ஜனநாயகன்.. வீடு புகுந்து 6 பேரை தூக்கிய போலீஸ்… முழு விவரம் உள்ளே!

மீன் வள திட்டம் முதல் கிராமப்புற சாலை திட்டம் வரை

பிரதமரின் மீன் வள திட்டத்தில் 1.80 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள், மீன் வளர்ப்பவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பயன் அடைந்துள்ளனர். ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ,5 லட்சம் மருத்துவ செலவுகளுக்காக வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகத்தில் தற்போது வரை 73,184 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிராமப்புற சாலை திட்டத்தில் ரூ.8,133 கோடியில் 15,816 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி நிதி

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், 4.18 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1,028 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா என்ற மகப்பேறு திட்டத்தில் தற்போது வரை 7.80 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ரூ.254 கோடி ரூபாயில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதே போல, பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் ரூ,14 லட்சம் கோடி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: NDA வேட்பாளருக்கு ஆதரவு.. தேர்தல் களத்தை அதிர வைக்க வரும் 6 துருவங்கள்.. பாஜக தலைமை போட்ட மாஸ்டர் பிளான்!

Follow Us