வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள்.. விஜய் வெளியிட்ட பக்கா மாஸ் அறிவிப்புகள்.. முழு விவரம் இதோ!
TVK Leader Vijay Speech : கன்னியாகுமரியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, புதிய திட்டங்கள் அவர் அறிவித்து பேசியதாவது:
மேலும் படிக்க: கடையநல்லூரில் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எம்.பி கனிமொழி.. பேசியது என்ன?
- லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் திட்டம் சென்று சேரும். அதற்கான தனித்துவமான Tamilnadu Citizen privilege card வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தை பற்றிய அனைத்து தரவுகளும் அந்த அட்டையில் இருக்கும்.
- பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து திட்டங்களும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சென்று சேரும். லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவை இல்லை. வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும். ஏஐ உதவியுடன் இதற்கான திட்டங்கள் சாத்தியமாக்கப்படும்.
- தவெக அரசு அமைந்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் அமல்படுத்தப்படும்.
- வெற்றி தமிழ்நாடு சூப்பர் என்ற ஆப் உருவாக்கப்படும். இதில், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். இதில், எந்த சேவை தாமதம் ஆனாலும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில், இடைத்தரகர், லஞ்சம் இருக்காது.
- தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் வெளிப்படை தன்மையுடன் இருக்கும்.
- அரசின் நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் தனியாக myvettritamilnadu.in என்ற வெப்சைட் உருவாக்கப்படும்.
- அரசின் கொள்கை முன்மொழிவுகளுக்கு வாக்களிக்கலாம். அரசு சேவைகளை மதிப்பிடலாம். நிதிநிலை அறிக்கை செலவினங்களை கண்காணிக்கலாம். 10 ஆயிரம் கையெழுத்துடன் ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டால் அரசு அதிகாரப்பூர்வ பதில் அளிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்படும். 5 லட்சம் கையெழுத்துகள் கொண்ட மனு எனில் தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.
- தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுமக்கள் மனுக்கள் மீதான விவாதத்துக்கு ஒரு நாள் ஒதுக்கப்படும்.
- மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருச்சியில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும். இதற்காக நுண்ணறிவு அமைச்சகம் உருவாக்கப்படும்.
தமிழகத்தின் கடன் 10.5 லட்சம் கோடிக்கு மேல்
இதைத் தொடர்ந்து விஜய் பேசுகையில், தமிழகத்தின் கடன் 10.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. தமிழகத்துக்கான வருமானத்தை விட, செலவு அதிகமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவு கடன்கள் வாங்கப்பட்டுள்ளன. அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக தேர்தலில் களமாட வந்துள்ளேன். ஒரு நாளும் பொய் கூறி உங்களை ஏமாற்ற மாட்டேன். தமிழகத்தில் எத்தனை முனை போட்டி என உருட்டினாலும் 2 முனை போட்டி தான். ஒன்னு டி. வி. கே மற்றொன்று டி. எம். கே. மக்களை நேசிக்கிற விஜய் வேண்டுமா அல்லது மக்களை ஏமாற்றுகின்ற ஸ்டாலின் சார் வேண்டுமா. அவ்வளவுதான் இந்த தேர்தலே என்று தெரிவித்தார்.




மேலும் படிக்க: விஜய்யின் பிரச்சாரம் அடுத்தடுத்து ரத்தாவது ஏன்?.. ஆதங்கத்தில் தொண்டர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்..