விஜய்யின் பிரச்சாரம் அடுத்தடுத்து ரத்தாவது ஏன்?.. ஆதங்கத்தில் தொண்டர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்..
Tamilnadu Assembly Election: கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென்று ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர் தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டது. காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசும் இடத்திற்கு செல்லாததால், பேசாமல் திரும்பினார்.
Tamilnadu Polls 2026: தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்யின் அடுத்தடுத்து பரப்புரை ரத்தாகி வருவது ஏன்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. இதற்காக அக்கட்சித் தலைவர் விஜய், மாவட்டம் தோறும் சென்று ரோடு ஷோ நடத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இந்த முறை விஜய் அரசியல் வருகையால், நான்குமுனை போட்டியாக களம் மாறியுள்ளது. இதனால், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிலான எதிர்பார்ப்பு தேர்தல் மீது எழுந்துள்ளது. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் அடுத்தடுத்து விஜய்யின் பரப்புரை ரத்தாகி வருவது, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: காரைக்குடியில் சைக்கிளில் பிரச்சாரம் செய்த விஜய்.. பேசாமல் போனதால் மக்கள் ஏமாற்றம்..
விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரை ரத்து:
கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென்று ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர் தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டது. காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசும் இடத்திற்கு செல்லாததால், பேசாமல் திரும்பினார். நேற்று கடலூரில் பிரசாரம் செய்வதாக இருந்தது. இந்த பிரசாரமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. திடீர் திடீரென பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்ன காரணம்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து:
இதுகுறித்து தவெக தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல் விவரம் வருமாறு, கடந்த 9ம் தேதி கடலூரில் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்தது. அந்த நாளில் புதுச்சேரியில் தேர்தல் நடந்ததால் சில பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. தற்போது, சில காரணங்களுக்காக அங்கே மீண்டும் பிரசாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம், சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே பிரசாரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இந்த நேரம் போதாது என்பதால் ரத்து செய்தோம் என்றனர்.
இதையும் படிக்க: “அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!
ஒருநாள் விட்டு, ஒருநாள் தான் அனுமதி:
பொதுவாக மற்ற கட்சிகளை விட எங்களுக்கு ஒருநாள் முன்புதான் அனுமதி கிடைக்கிறது. தேர்தல் கமிஷன், போலீஸ் நிபந்தனைகளை அந்த ஒரு நாளில் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. அது போன்ற காரணங்களால் பிரசாரத்தை ரத்து செய்கிறோம். ஒட்டு மொத்தமாக பல தொகுதிகளில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஒருநாள் விட்டு, ஒருநாள்தான் அனுமதி கிடைக்கிறது. தூரம், பாதுகாப்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகள் இவற்றை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது. எனவே அடிக்கடி பிரசாரம் ரத்து செய்யப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. நிர்வாக வசதிக்காக இதுபோன்று நடப்பது சகஜம் தான் என்றனர்.