AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!

Tamilnadu Assembly Election: இந்தத் தேர்தல் ஒரு சாதாரணத் தேர்தல் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய விஜய், "இது நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான ஒரு தலைமுறைக்கான தேர்தல்" என்று குறிப்பிட்டுள்ளார். மக்களாட்சியை நிலைநாட்ட ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Apr 2026 13:37 PM IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இன்றைய கடலூர் பிரச்சாரம், நிர்வாக காரணங்களால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. கட்சித் தலைவர் விஜய், மாவட்டம் தோறும் சென்று ரோடு ஷோ நடத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இந்த முறை விஜய் அரசியல் வருகையால், நான்குமுனை போட்டியாக களம் மாறியுள்ளது. இதனால், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிலான எதிர்பார்ப்பு தேர்தல் மீது எழுந்துள்ளது. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் அடுத்தடுத்து விஜய்யின் பரப்புரை ரத்தாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: காரைக்குடியில் சைக்கிளில் பிரச்சாரம் செய்த விஜய்.. பேசாமல் போனதால் மக்கள் ஏமாற்றம்..

பிரசார ரத்து பின்னணி:

விஜய்யின் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சில தொழில்நுட்பக் காரணங்களால் அவரது பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரசாரம் ரத்தானதால் தொண்டர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, களத்தில் இறங்கிப் பணியாற்றுமாறு அவர் இந்த ஊக்கமளிக்கும் கடிதத்தை எழுதியுள்ளார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க அழைப்பு:

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், தொண்டர்களுக்கு உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அடுத்த 10 நாட்களுக்குத் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்திக்க வேண்டும். வீட்டுக்கு வீடு சென்று கட்சியின் கொள்கைகளை விளக்கி, ‘விசில்’ சின்னத்திற்கு வாக்குச் சேகரிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!

மாற்றத்திற்கான தேர்தல்:

இந்தத் தேர்தல் ஒரு சாதாரணத் தேர்தல் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய விஜய், “இது நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான ஒரு தலைமுறைக்கான தேர்தல்” என்று குறிப்பிட்டுள்ளார். மக்களாட்சியை நிலைநாட்ட ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகளும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், எவ்விதத் தன்முனைப்பும் இல்லாமல், தோழமை உணர்வோடு அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். “வாகை சூடும் வரலாறு திரும்பும்” என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுடன் தனது பதிவை முடித்துள்ள விஜய், மாற்றத்திற்கான சக்தியாகத் தனது கட்சி பயணித்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

Follow Us