AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கன்னியாகுமரியில் விஜய் நாளை பிரசாரம்.. விபரீதங்களை தடுக்க வித்தியாசமான ஏற்பாடு!

Tvk Leader Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி கன்னியாகுமரியில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மேலும், அந்தப் பகுதியில் விபரீதங்களை தடுப்பதற்காக மரங்கள், மின் கம்பிகள் உள்ளிட்டவற்றில் தகர ஷீட்டுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன .

கன்னியாகுமரியில் விஜய் நாளை பிரசாரம்.. விபரீதங்களை தடுக்க வித்தியாசமான ஏற்பாடு!
கன்னியாகுமரியில் விபரீதத்தை தடுக்க ஏற்பாடு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 11 Apr 2026 21:00 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த மார்ச் 30- ஆம் தேதி முதல் தனது தீவிர பிரச்சார பயணத்தை விஜய் முன்னெடுத்து வருகிறார். இதில், பெரம்பூர், கொளத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்திருந்த விஜய் கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், 2 முறை கடலூர் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதே போல, கும்மிடிப்பூண்டியிலும் விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 12) கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி, நாளை தவெக தலைவர் விஜய் திட்டமிட்டபடி பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

தனி விமானத்தில் தூத்துக்குடி செல்லும் விஜய்

இதற்காக, அவர் சென்னையில் இருந்து தனி விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்றடைகிறார். அங்கிருந்து, கார் மூலம் சாலை வழியாக பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரியை அடைகிறார். இதைத் தொடர்ந்து, மகாதானபுரம் ரவுண்டானாவில் தவெக தலைவர் விஜய்க்கு, கட்சியினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு செல்லும் அவர் பழத்தோட்டம் பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடர்கிறார். தொடர்ந்து, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேச உள்ளார்.

மேலும் படிக்க: தலைமை செயலர் – டிஜிபி வரிசையில் உள்துறை செயலர் மாற்றம்.. கோட்டையில் அதிரும் புதிய நியமனங்கள்!

மேடை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள்

இதற்காக அந்த பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள், இருக்கைகள் அமைக்கும் பணிகள், மேடை அலங்கார பணிகள் உள்ளிட்டவை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து ஜீரோ பாயிண்ட் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே, தவெக தலைவர் விஜய் சாலை பலம் மட்டுமே செல்வார் எனவும், பிரச்சாரம் செய்ய மாட்டார் எனவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது விஜய் திட்டமிட்டபடி பிரச்சாரம் மட்டுமே செய்வார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

விபரீதங்களை தடுக்க வித்தியாசமான ஏற்பாடு

இந்த நிலையில், தவெக நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதியில் பங்கேற்க வரும் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அவரது வாகனத்தை பின் தொடர்வதும், அவர் பேசும் இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள், ட்ரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவற்றில் ஏறுவதுமாக இருந்து வருகின்றனர். இதில், எதிர்பாராத விதமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில், அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்ட உயரமான பொருள்கள் தகர ஷீட்டுகள் மூலம் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தேர்தல் ஆணையம் “யு-டர்ன்”.. மீண்டும் ஊழல் தடுப்பு டிஜிபியாகும் டேவிட்சன்.. என்ன காரணம்?

Follow Us