AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

NDA வேட்பாளருக்கு ஆதரவு.. தேர்தல் களத்தை அதிர வைக்க வரும் 6 துருவங்கள்.. பாஜக தலைமை போட்ட மாஸ்டர் பிளான்!

6 State CM Campaign In Tamil Nadu : தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 6 மாநில முதல்வர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்த பாரதீய ஜனதா கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

NDA வேட்பாளருக்கு ஆதரவு.. தேர்தல் களத்தை அதிர வைக்க வரும் 6 துருவங்கள்.. பாஜக தலைமை போட்ட மாஸ்டர் பிளான்!
தமிழக தேர்தல் களத்தில் 6 முதல்வர்களை களமிறக்கும் பாஜக தலைமை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Apr 2026 20:55 PM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு வெறும் 10 நாட்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பரப்புரை பயணத்தை வேகப்படுத்தி உள்ளனர். மேலும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகியோர் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் நிதி நபீன் இன்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழக தேர்தலில் களமிறங்கும் 6 மாநில துருவங்கள்

இதே போல, பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 15- ஆம் தேதி ( புதன்கிழமை) கன்னியாகுமரியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 6 மாநிலங்களின் முதல் அமைச்சர்களை பாஜக தலைமை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க: இணையத்தில் கசிந்த ஜனநாயகன்.. வீடு புகுந்து 6 பேரை தூக்கிய போலீஸ்… முழு விவரம் உள்ளே!

பிரசாரத்தில் ஈடுபடும் துருவங்கள் யார்

இதற்காக தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, புதுடெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகிய 6 மாநில முதல்வர்கள் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட 40 பெயர் பிரச்சாரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

தேசிய கட்சி தலைவர் 888 பேர் பிரசாரம்

இதை தவிர்த்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி உள்பட, தேசிய கட்சிகளை சேர்ந்த 888 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக தேர்தல் களத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதே போல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்பட 35 பேருக்கும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி உட்பட 40 பேருக்கும், நாம் தமிழர் கட்சியில் சீமான் உள்பட 40 பேருக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தை வட்டமிடும் பாஜக பருந்தை விரட்டியடிக்க வேண்டும்… மு. க. ஸ்டாலின் அழைப்பு!

Follow Us