AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராமதாஸ் உடல்நிலை.. யாரையும் சும்மா விடமாட்டேன்.. அன்புமணி பகிரங்க எச்சரிக்கை!

PMK Founder Ramadoss Ill Health: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவு விவகாரத்தில் தொடர்புடை நபர்களை சும்மா விடமாட்டேன் என்று அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்பு மணி ராமதாஸ் பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராமதாஸ் உடல்நிலை.. யாரையும் சும்மா விடமாட்டேன்.. அன்புமணி பகிரங்க எச்சரிக்கை!
யாரையும் சும்மா விடமாட்டேன் அன்புமணி எச்சரிக்கை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 13 Apr 2026 06:27 AM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 12) சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் அருளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது, பிரச்சாரத்தை முடித்துவிட்டு மேடையில் இருந்து ராமதாஸ் இறங்கிய போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கினார். இதனை சுதாரித்த கட்சியினர் அவரை தாங்கி பிடித்து ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில், அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் திடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்கு பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அன்புமணி ராமதாஸ் விடுத்த பகீரங்க எச்சரிக்கை

இந்த நிலையில், சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸ் மேடையில் மயங்கி உடல் நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் குறித்து, அவரது மகனும் பாமக தலைவர் ஆகிய அன்புமணி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், விருதாச்சலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பரப்புரை பொதுக்கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் ” ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா, இதில் சம்பந்தப்பட்டவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்று கூறினார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் படிக்க: ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்.. கடை முன் குவிந்த பெண்கள்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி!

இரு அணிகளாக செயல்படும் ராமதாஸ் – அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதேபோல, சட்டமன்ற தேர்தலிலும் அன்புமணி தலைமையிலான பாமக, ராமதாஸ் தலைமையிலான பாமக என தனித்தனியே போட்டியிட உள்ளது. இதில், ராமதாஸ் தலைமையிலான அணி சசிகலா தொடங்கிய அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.

தாயிடம் ஆசி பெற சென்ற அன்புமணி

இந்த நிலையில், ராமதாஸ் நேற்று சேலத்துக்கு பரப்புரைக்கு சென்றிருந்த நிலையில், அன்புமணி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது அம்மா சரஸ்வதியை நேரில் பார்க்க சென்றிருந்தார். அங்கு, தனது தாய் சரஸ்வதியை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற ஆசி பெற்றார். பின்னர், அவருடன் சேர்ந்து அன்புமணி ராமதாஸ் மதிய உணவு சாப்பிட்டார். இதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் தாயுடன் பேசிவிட்டு, அன்புமணி அங்கிருந்து காட்டுமன்னார்கோவில் பரப்புரை பயணத்துக்காக புறப்பட்டு சென்றார்.

மேலும் படிக்க: NDA வேட்பாளருக்கு ஆதரவு.. தேர்தல் களத்தை அதிர வைக்க வரும் 6 துருவங்கள்.. பாஜக தலைமை போட்ட மாஸ்டர் பிளான்!

Follow Us