AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தைரியமிருந்தால் கடிதத்தை வெளியிடுங்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!

MK Stalin challenges Nirmala Sitharaman: தமிழகத்தில் நெல் சாகுபடிக்கான ஊக்கத் தொகையை நிறுத்துவது தொடர்பாக மத்திய பாஜக அரசு அனுப்பிய கடிதத்தை பொது வெளியில் வெளியிட தயாரா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தைரியமிருந்தால் கடிதத்தை வெளியிடுங்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!
நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் சவால்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Apr 2026 08:23 AM IST

தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்ததாக முதல்வர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், இதற்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்திருந்தார். இதில், முதல்வர் மு. க. ஸ்டாலின் சுமத்திய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. மேலும், அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த குற்றச்சாட்டு தமிழக விவசாயிகளை திசை திருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் கருத்துக்கு சவால் விடுத்து முதல்வர் மூ. க. ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை ( ஏப்ரல் 13 ) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அரசு வழங்கும் ஊக்கத் தொகையால் நெல் விளைச்சல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு அண்மையில் மத்திய அமைச்சகம் கடிதம் அனுப்பி இருந்தது.

தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதம்

அந்த கடிதத்தில் இந்த கருத்து தெளிவாக உள்ளது. எனவே, அந்த கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி பேசி விவசாயிகளை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தமிழகத்துக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்த பரிசீலனை செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தை வட்டமிடும் பாஜக பருந்தை விரட்டியடிக்க வேண்டும்… மு. க. ஸ்டாலின் அழைப்பு!

கடிதத்தை பொது வெளியில் வெளியிட தயாரா

மத்திய நதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பதிவில் குறைந்தபட்ச ஆதார விலை தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களது கருத்து உண்மை என்றால், விவசாயிகளுக்கான நெல் சாகுபடி ஊக்கத்தொகை நிறுத்தம் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசி இருந்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா விளக்கம்

அப்போது, விவசாயிகளுக்கு நெல் சாகுபடி ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக பேசிய ஸ்டாலின், அந்த ஊக்கத் தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு, மத்திய அரசு இவ்வாறு கருத்துடைய கடிதத்தை அனுப்பவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரது கருத்துக்கு மு. க. ஸ்டாலின் பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க: ஏப்.15-க்குள் பதில் அளிக்க வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக வலியுறுத்தல்!

Follow Us