மன அழுத்தம் உடல்நலத்திற்கு தீங்கு என நாம் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் Proceedings of the National Academy of Sciences வெளியிட்ட ஆய்வு, நம்மைச் சுற்றியுள்ள “toxic” மனிதர்கள் உடல் முதிர்வை வேகப்படுத்தலாம் என தெரிவிக்கிறது. விமர்சனம், சண்டை, எதிர்மறை நடத்தை மூலம் அழுத்தம் ஏற்படுத்துவோரைக் “hasslers” என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 2,300 பேரை ஆய்வு செய்ததில், ஒவ்வொரு stressful நபரும் உடல் முதிர்வை சுமார் 1.5% அதிகரிக்கச் செய்கிறார். இத்தகைய உறவுகள் உள்ளவர்கள், பிறரை விட சுமார் 9 மாதங்கள் அதிக உயிரியல் வயதை காட்டினர்.