AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

60% ஆக உயர்ந்த இந்தியாவின் உள்நாட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி.. மத்திய பெட்ரோலிய துறை தகவல்!

India's LPG Domestic Gas Cylinder Production Raised | ஈரான் போர் காரணமாக இந்தியா மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சந்தித்து வந்த நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் உற்பத்தி ஒரே மாதத்தில் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

60% ஆக உயர்ந்த இந்தியாவின் உள்நாட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி.. மத்திய பெட்ரோலிய துறை தகவல்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2026 14:02 PM IST

புதுடெல்லி, ஏப்ரல் 11 : ஈரான் போர் (Iran War) காரணமாக இந்தியா (India) மிக கடுமையான கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) தட்டுப்பாட்டை சந்தித்தது. இந்த நிலையில், ஒரே மாதத்தில் இந்தியாவில் உள்நாட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் உற்பத்தி 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18, 2026 அன்று 40 சதவீதமாக இருந்த உள்நாட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் உற்பத்தில் தற்போது 60 சதவீதத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடும் சவால்களை எதிர்க்கொண்ட இந்தியா

ஈஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நிலவில் வந்த நிலையில், தன் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் செல்லக்கூடிய மிக முக்கிய வழித்தடமாக ஹோர்முஸ் உள்ள நிலையில், ஈரான் அதனை மூடியதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோ மற்றும் டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றால் உலக நாடுகள் கடும் சிரமங்களை சந்தித்து வந்தன. குறிப்பாக இந்தியாவில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க : பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை… அதிரடியில் இறங்கிய சிபிஎஸ்இ!

60 சதவீதமாக உயர்ந்த உள்நாட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் உற்பத்தி

சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், 2025 – 2026 காலக்கட்டத்தில் இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர் நுகர்வு 33.21 மில்லியன் டன்களாக இருந்துள்ளது. மாத தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், பிப்ரவரி 28, 2026 அன்று வெடித்த ஈரான் போர் காரணமாக மார்ச் மாதத்தில் கேஸ் சிலிண்டர் நுகர்வு பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இந்தியா தனது 60 சதவீத கேஸ் சிலிண்டர் தேவைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமே மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கத்தாரில் இருந்து தான் இந்தியா தனது பெரும்பாலான கேஸ் சிலிண்டர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

இதையும் படிங்க : ஹோர்முஸை கடந்து இந்தியாவுக்கு வந்த கப்பல் கிரீன் ஆஷா.. 11 நாட்களுக்கான கேஸ் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!

2026 ஜனவரி மாதத்தில் 3.012 மில்லியன் டன்களாக இருந்த நுகர்வு, பிப்ரவரி மாதத்தில் 2.822 டன்களாக இருந்துள்ளது. இந்த நிலையில், ஈரான் போர் காரணமாக மார்ச் மாதத்தில் 2.379 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் இருந்து 26.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. தற்போது ஈரான் மீதான போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தி அதிரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us