ஹோர்முஸை கடந்து இந்தியாவுக்கு வந்த கப்பல் கிரீன் ஆஷா.. 11 நாட்களுக்கான கேஸ் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!
Green Asha Ship Contained 15,400 LPG Gas Reached Mumbai | ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒவ்வொன்றாக இந்திய கப்பல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிரீன் ஆஷா என்ற இந்திய கப்பல் ஹோர்முஸ் நீரிணையை கடந்து மும்பை துறைமுகத்திற்கு வந்துள்ளது.
மும்பை, ஏப்ரல் 10 : ஈரான் போர் (Iran War) சூழலுக்கு மத்தியில், மேலும் ஒரு இந்திய கப்பல் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடந்து இந்தியா வந்துள்ளது. ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ள நிலையில் , உலக நாடுகள் கடும் எண்ணெய் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியா தனது 9வது கப்பலை ஹோர்முஸ் நீரிணையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. மும்பை வந்தடைந்துள்ள கிரீன் ஆஷா கப்பலில் சுமார் 15,400 டன் சமையல் எரிவாயு இந்தியா வந்தடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கான சில நாட்களுக்கான கேஸ், சிலிண்டர் குறித்த அபாயம் நீங்கியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல் கிரீன் ஆஷா
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமான ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump), ஈரானை தொடர்ந்து எச்சரித்து வருகிறார். கடைசியாக 48 மணி நேர கெடு விதித்திருந்தார். இந்த நிலையில், கெடு முடிவடைய இருந்த கடைசி நிமிடங்களில் பாகிஸ்தான் நடத்திய பேச்சுவார்த்தையின் படி, ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு இரண்டு வாரங்களுக்கு அனுமதி வழங்கியும், அதுவரை ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தம்.. மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான்.. இரு நாடுகளுக்கும் நம்பிக்கை பிறந்தது எப்படி?
15,400 டன் சமையல் எரிவாயு இந்தியாவுக்கு வந்துள்ளது
ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் சில நாடுகளில் கப்பல்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடும் சவால்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், இந்தியா தொடர்ந்து தனது கப்பல்களை ஹோர்முஸ் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் கிரீஷ் ஆஷா என்ற கப்பல் தற்போது மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் மூலம் சுமார் 15,400 டன் சமையல் எரிவாயு இந்தியாவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க : ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அரசு.. 5கிலோ சிலிண்டர் இரட்டிப்பு.. யாருக்கு தெரியுமா?
இது தொடர்பாக நடைபெற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டத்தில், கடந்த 40 நாட்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த மற்ற நாட்டு கப்பல்களை விட இந்தியா அதிகப்படியான கப்பல்களை மீட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மீட்கப்பட்டுள்ள கிரீன் ஆஷா கப்பலில் உள்ள எரிபொருள் இந்தியாவின் 11 நாட்களுக்கான இறக்குமதி தேவையை பூர்த்தி செய்ய போதுமானது என அமைச்சர்கள் குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.