AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BCCI New Rule: பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு.. இந்திய கிரிக்கெட்டில் 8 முக்கிய விதிகளில் மாற்றம்!

BCCI Changes Major Rule: முதல் தர கிரிக்கெட்டில் அன்றைய கடைசி ஓவரில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் களத்திற்குள் நுழைவது தொடர்பானது முதல் பல மாற்றங்களை பிசிசிஐ கொண்டுவந்துள்ளது. இது தவிர, உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் க்ளவ்ஸ் தொடர்பான புதிய விதியும் அமல்படுத்தப்படும்.

BCCI New Rule: பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு.. இந்திய கிரிக்கெட்டில் 8 முக்கிய விதிகளில் மாற்றம்!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Jul 2026 15:49 PM IST

இந்திய கிரிக்கெட்டில் (Indian Cricket) ஒரு புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. எம்சிசி என்று அழைக்கப்படும் மெரிலேபோன் கிரிக்கெட் கிளப் முன்மொழிந்த புதிய விதிகளை பிசிசிஐ (BCCI), உள்நாட்டு கிரிக்கெட்டில் அமல்படுத்துகிறது. இந்த புதிய விதிகள் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் பிற உள்நாட்டுப் போட்டிகளுக்குப் பொருந்தும். இந்த விதிகள், முதல் தர கிரிக்கெட்டில் அன்றைய கடைசி ஓவரில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் களத்திற்குள் நுழைவது தொடர்பானது முதல் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது தவிர, உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் க்ளவ்ஸ் தொடர்பான புதிய விதியும் அமல்படுத்தப்படும். வைட் பந்துகள் தொடர்பாகவும் புதிய விதிகள் அமல்படுத்தப்படும்.

ALSO READ: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பு.. முன்னாள் வீரரை அழைத்த பிசிசிஐ.. காரணம் இதுதான்!

இந்திய கிரிக்கெட்டில் புதிய விதிகள்:

  • பிசிசிஐ புதிய விதிகளின்படி, முதல் தர கிரிக்கெட்டில் ஒரு நாளின் கடைசி ஓவரை முழுமையாக விளையாடி முடிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளின் கடைசி ஓவரில் விக்கெட் விழுந்தால், ஆட்டம் அத்துடன் நின்றுவிடாது. புது பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்து, அன்றைய நாளின் கடைசிப் பந்து வரை விளையாட வேண்டியிருக்கும்.
  • ஒருநாள் போட்டிகளின்போது ட்ரிங்ஸ் இடைவேளைகளில் தலைமைப் பயிற்சியாளர் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்.
  • ஒரு வீரர் வேண்டுமென்றே ஷார்ட் ரன்கள் எடுத்தால், அடுத்த பந்தை எந்த பேட்ஸ்மேன் எதிர்கொள்வார் என்பதை ஃபீல்டிங் கேப்டன் மட்டுமே தீர்மானிக்கலாம்.

ALSO READ: முடிந்த இங்கிலாந்து தொடர்.. இந்திய ஜெர்ஸியில் அடுத்து ரோஹித், கோலி எப்போது களமிறங்குவார்கள்?

  • பந்து டெட் என அறிவிப்பதற்கான விதியும் மாற்றப்பட்டுள்ளது. ஒரு பந்து டெட் எனக் கருதப்படுவதற்கு, அது இனி பந்துவீச்சாளர் அல்லது விக்கெட் கீப்பரின் கையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பந்து ஒரு ஃபீல்டரின் கையில் இருந்தாலோ அல்லது தரையில் விழுந்திருந்தாலோ, அது டெட் எனக் கருதப்படும்.
  • ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் லெக்-சைடு வைடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
  • பந்து வீசப்படும்போது அனைத்து பீல்டர்களும் எல்லைக் கோட்டிற்குள் இருக்க வேண்டும்.
  • ஓடும்போது க்ளவ்ஸ்களை முன்னோக்கி வைத்திருப்பதற்காக விக்கெட் கீப்பர்களுக்கு இனி தண்டனை விதிக்கப்படாது.
  • ஒரு பந்துவீச்சாளர் வேண்டுமென்றே நோ-பால் வீசினாலோ அல்லது வீச முயன்றாலோ, அவர் அந்தப் போட்டியின் மீதமுள்ள ஓவர்கள் பந்துவீசத் தடை செய்யப்படுவார். அவரால் அந்த இன்னிங்ஸில் பந்துவீச முடியாது.

Follow Us