Team India: 9 மாதங்களில் 3 ஒருநாள் தொடர் இழப்பு.. சிக்கலில் கில் கேப்டன்ஷி!
Shubman Gill Captaincy: 2025 சாம்பியன் டிராபி வரை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார். அப்போது, அவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதை தொடர்ந்து, பிசிசிஐ இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது ஒருநாள் கேப்டன்சியைத் தொடங்கினார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் (Indian Cricket Team) ஒருநாள் போட்டி பயணம் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பை ஏற்றதிலிருந்து, இந்திய அணி வெற்றிகளை விட தோல்விகளையே அதிகமாகச் சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து (England) போன்ற வலுவான அணிகளுக்கு எதிரான தோல்விகளுக்குப் பிறகு, இந்திய அணியின் ஆயத்தங்கள் மற்றும் வியூகம் குறித்து தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. வருகின்ற 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாட இருப்பதால், அதற்குள் பிசிசிஐ இந்திய அணிக்குள் இருக்கும் தவறுகளை சரிசெய்வது முக்கியமானது.
சுப்மன் கில்லின் தலைமையின் கீழ், இந்தியா கடந்த 9 மாதங்களில் மொத்தம் 4 ஒருநாள் தொடர்களில் விளையாடி, அவற்றில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒரே வெற்றியும் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகக் கிடைத்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தானை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.
ALSO READ: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பு.. முன்னாள் வீரரை அழைத்த பிசிசிஐ.. காரணம் இதுதான்!




ஆரம்பமே தோல்வி:
2025 சாம்பியன் டிராபி வரை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார். அப்போது, அவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதை தொடர்ந்து, பிசிசிஐ இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது ஒருநாள் கேப்டன்சியைத் தொடங்கினார். இருப்பினும், இந்தத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கைப்பற்றியது. இந்தத் தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் சிக்கல்கள் அதிகரித்தன.
பின்னர், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, நியூசிலாந்து இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது. நியூசிலாந்து அணி, 37 ஆண்டுகள் பழமையான சாதனையை முறியடித்து, இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
ALSO READ: சதம் அடித்தும் சந்தோஷம் இல்லாத ரோஹித்.. கம்பீருடன் காரசார விவாதம்!
இங்கிலாந்து மண்ணிலும் தோல்வி:
இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் ஒருநாள் தொடரை வெளிநாட்டில் வெல்ல சுப்மன் கில்லுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கில் தலைமையிலான இந்திய அணியால் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்தியா அந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. தற்போது கில்லின் தலைமையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி தனது குறைகளை சரிசெய்ய வேண்டும், ஏனெனில் தொடர்ச்சியான தோல்விகள் அணிக்கும் பிசிசிஐக்கும் கவலையளிக்கும் விஷயமாக மாறி வருகின்றன.