AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் – ஹர்ஷித் ரானாவுக்கு புதில் யாஷ் தாக்கூர் தேர்வு

Yash Thakur Replaces Rana : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகிய இரண்டிலும் ஹர்ஷித் ரானா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக யாஷ் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் – ஹர்ஷித் ரானாவுக்கு புதில் யாஷ் தாக்கூர் தேர்வு
ஹரிஷ் ரானா - யாஷ் தாக்கூர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Sep 2026 15:55 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகிய இரண்டிலும் ஹர்ஷித் ரானா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக யாஷ் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணிகளில் ரானா இடம் பெற்றிருந்தார். எனினும், அவர் விளையாடுவது அவரது உடல் தகுதியைப் பொறுத்தே அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை மூலம் அவர் அணியிலிருந்து விலகியதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஹர்ஷித் ரானா ஏன் விலகினார்?

முன்னதாக, பிசிசிஐயின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் ரானா நன்றாக குணமடைந்து வருவதாகவும், அவர் மீண்டும் அணிக்குத் திரும்பக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், பிசிசிஐயின் அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் 7, 2026 அன்று நடைபெற்ற போட்டியின் போது அவருக்குப் புதிய காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆப்கானிஸ்தான் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையும் படிக்க :  IND A vs AUS A: காத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யா.. உள்ளூர் போட்டிகளில் பிசிசிஐ கொடுத்த வாய்ப்பு..! உடற்தகுதி பெறுவாரா?

ரானாவுக்குப் பதிலாக யாஷ் தாக்கூர்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 27 வயதான வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர், இந்திய அணியில் ஹர்ஷித் ரானாவின் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் மூலம் யாஷ் இந்திய அணிக்காக அறிமுகமானார். இதுவரை இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில், சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் 50 போட்டிகளில் விளையாடி, 7.04 என்ற எகானமி ரேட்டில் 81 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 போட்டியில் இந்திய அணியில், கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யாஷ் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க : Asian Games 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி! இந்திய அணியில் பெரிய மாற்றம்.. என்ன தெரியுமா?

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் அதே டி20 அணியே செப்டம்பர் 19, 2025 அன்று தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும். இரண்டு தொடர்களுக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுவார். திலக் வர்மா துணை கேப்டனாக இருப்பார். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 13, 2026 அன்றுத தொடங்குகிறது.

Follow Us