Asian Games 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி! இந்திய அணியில் பெரிய மாற்றம்.. என்ன தெரியுமா?
Pratika Rawal: கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற 'தி ஹன்ட்ரட்' தொடரின் போது சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடியபோது ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயமடைந்தார். அன்று முதல், ஜெமிமா ரோட்ரிக்ஸ் களத்தில் இருந்து விலகி மறுவாழ்வு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதன் விளைவாக, பிரதிகா ராவல் சமீபத்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 ஆசியக் கோப்பையில் தனது சர்வதேச டி20 அறிமுகத்தை மேற்கொண்டார்.
2026 ஆசிய கோப்பையில் (2026 Asia Cup) ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு இந்திய மகளிர் அணியில் ஒரு பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. அதாவது, காயம் காரணமாக விலகிய நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸுக்குப் பதிலாக ஒரு இளம் வீராங்கனை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பெயரையும் தற்போது பிசிசிஐ (BCCI) வெளியிடப்பட்டுள்ளது.
ALSO READ: அக்டோபர் 3ம் தேதி இவ்வளவு ஷ்பெஷலா? ஒரே நாளில் 2 போட்டியில் விளையாடும் இந்திய அணி!
யாருக்கு இந்திய மகளிர் அணியில் வாய்ப்பு..
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அனுபவமிக்க பேட்ஸ்மேன் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தொடை தசைநார் காயத்தால் அவதிப்படுவதால், அவர் 2026 ஆசியக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.ஊடக அறிக்கைகளின்படி, இந்தியத் தேர்வாளர்களும் அணி நிர்வாகமும், ஜெமிமா ரோட்ரிக்ஸுக்குப் பதிலாக ஆசியக் கோப்பையிலும் விளையாடி வரும் பிரதிகா ராவலை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ‘தி ஹன்ட்ரட்’ தொடரின் போது சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடியபோது ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயமடைந்தார். அன்று முதல், ஜெமிமா ரோட்ரிக்ஸ் களத்தில் இருந்து விலகி மறுவாழ்வு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதன் விளைவாக, பிரதிகா ராவல் சமீபத்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 ஆசியக் கோப்பையில் தனது சர்வதேச டி20 அறிமுகத்தை மேற்கொண்டார். ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து, பிரதிகா ராவல் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளாட். தற்போது, நடைபெற்று வரும் 2026 ஆசியக் கோப்பையில் பிரதிகா ராவல் தொடக்க ஆட்டக்காரராக இருந்தாலும், 3-வது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்கிறார். இத்தொடரில் தனது முதல் 3 போட்டிகளில், பிரதிகா ராவல் முறையே 22, 10 மற்றும் 4 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: அம்பயருக்கு எதிராக குரல்.. சிக்கலில் சிக்கிய மற்றொரு பாகிஸ்தான் பிளேயர்
நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பிறகு வாய்ப்பு:
பிரதிகா ராவலின் இந்த நிலையை நோக்கிய பயணம் எளிதானதாக இருக்கவில்லை. 2024-ஆம் ஆண்டில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், பிரதிகா ராவல் நீண்ட காலமாக டி20 போட்டியில் விளையாடவில்லை. 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் போது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவரது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, இதனால் அவர் ஒரு குறிப்பிடத்தக்க காலத்தைத் தவறவிட நேரிட்டது. இப்போது, அவர் அடுத்தடுத்து இரண்டு பெரிய தொடர்களில் விளையாடத் தயாராக உள்ளார்.