AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கும்பமேளா ‘வைரல் பெண்’ மோனாலிசா திருமணத்தில் அதிரடித் திருப்பம்.. கணவர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு..

Huge Twist In Viral Kumbh Girl Monalisa marraige: இந்த விவகாரம் குறித்துப் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (NCST) நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, திருமணத்தின் போது மோனாலிசா மேஜர் எனக் காண்பிக்கப் போலியான பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கும்பமேளா ‘வைரல் பெண்’ மோனாலிசா திருமணத்தில் அதிரடித் திருப்பம்.. கணவர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு..
கணவருடன் மோனாலிசா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Apr 2026 12:12 PM IST

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 2025ல் நடந்த மஹா கும்பமேளா திருவிழாவின் போது சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியா முழுவதும் பிரபலமான மோனாலிசா போஸ்லேவின் திருமணத்தில், தற்போது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ருத்ராட்ச மாலைகளை விற்றுக் கொண்டிருந்த போது, தனது தனித்துவமான கண்கள் மற்றும் தோற்றத்தால் மோனாலிசா சமூக வலைதளங்களில் ஒரே இரவில் பிரபலமானார். மஹா கும்பமேளாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊடகத்தினரின் கவனத்தை ஈர்த்த இவருக்கு, அதனைத் தொடர்ந்து மாடலிங் வாய்ப்புகளும் கிடைத்தன.

இதையும் படிக்க: தடைகளைத் தகர்த்து காதலனை கரம் பிடித்த “கும்பமேளா புகழ் மோனலிசா”.. கேரளாவில் அரங்கேறிய நிஜ “கேரளா ஸ்டோரி”..

காதலில் விழுந்த மோனாலிசா:

மோனாலிசா சமீபத்தில் நடிகரும், மாடலுமான ஃபர்மான் கான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவுக்கும், ஃபர்மான் கானுக்கும் இடையே சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் நட்பு உருவானது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மோனலிசாவின் குடும்பத்தினர் அவரது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, நிற்காமல் மோனலிசாவின் தந்தை உடனடியாக தனது மகளுக்குத் உறவினர் ஒருவடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் நடந்த திருமணம்:

இதனிடையே, சமீபத்தில் படப்பிடிப்புக்காக கேரளா சென்றிருந்த மோனலிசா, காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர்கள் காவல்துறையின் பாதுகாப்பையும் பெற்றிருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மோனலிசா 18 வயது நிறைவடைந்த பெண் என்பதால், அவர் விருப்பத்திற்கு போலீசாரும் இணங்கினர். அதன்படி, கேரளாவின் அருமனூர் ஸ்ரீ நயினார் தேவா கோவிலில் இந்து முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது. குறிப்பாக, இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

‘லவ் ஜிகாத்’ என குற்றச்சாட்டு:

தாங்கள் ஆறு மாதங்களாகக் காதலித்து வந்ததாகவும், மோனாலிசாவே காதலை முதலில் முன்மொழிந்ததாகவும் பர்மான் கான் தெரிவித்திருந்தார். இந்தத் திருமணத்தை ‘லவ் ஜிகாத்’ என்று மோனாலிசாவின் பெற்றோர் விமர்சித்ததோடு, தனது மகளைக் கடத்தி மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகப் புகார் அளித்திருந்தனர். ஆனால், தங்களது திருமணத்தில் எந்த மதமாற்றமும் நடைபெறவில்லை என்று தம்பதியினர் அதனை மறுத்து வந்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் உண்மை:

இந்த விவகாரம் குறித்துப் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (NCST) நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, திருமணத்தின் போது மோனாலிசா மேஜர் எனக் காண்பிக்கப் போலியான பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மோனாலிசாவின் உண்மையான பிறந்த தேதி டிசம்பர் 30, 2009 என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மார்ச் 11, 2026 அன்று திருமணம் நடைபெற்ற போது அவருக்கு வயது 16 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 12 நாட்கள் மட்டுமே. அதாவது, சட்டப்படி அவர் ஒரு மைனர் சிறுமி ஆவார்.

இதையும் படிக்க: 1,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் சடலமாக மீட்கப்பட்ட கேரள சிறுமி.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்..

கணவர் மீது சட்ட நடவடிக்கை:

மோனாலிசா சிறுமி என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது கணவர் பர்மான் கான் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போலி ஆவணங்கள் தயாரித்தல், சட்டவிரோதத் திருமணம் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) அவர் மீது கிரிமினல் வழக்குகள் பாய்ந்துள்ளன. சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பெண்ணின் காதல் திருமணம், தற்போது சட்ட ரீதியான சிக்கல்களில் முடிந்துள்ளதும், அவர் ஒரு சிறுமி எனத் தெரியவந்துள்ளதும் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us