AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

1,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் சடலமாக மீட்கப்பட்ட கேரள சிறுமி.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்..

Tragedy Strikes During Vacation: கர்நாடகக் காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் அதிநவீன உபகரணங்களுடன் தேடுதல் பணியில் இறங்கினர். இரவு நேரங்களில் தேடுவதற்கு ஏதுவாகத் தெர்மல் கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், ஆரம்பகட்ட தேடுதலில் எந்தத் தடயமும் கிடைக்காதது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

1,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் சடலமாக மீட்கப்பட்ட கேரள சிறுமி.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்..
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Apr 2026 09:58 AM IST

கர்நாடக மாநிலத்தின் சந்திரத்ரோணா மலைப்பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது மாயமான 14 வயது கேரள சிறுமி, நான்கு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீ நந்தா (14), பத்தாம் வகுப்பு மாணவி. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுமார் 40 பேருடன் கர்நாடகாவிற்குச் சுற்றுலா சென்றிருந்தார். ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் சிக்கமகளூரு வந்தடைந்த அவர்கள், மாலையில் சந்திரத்ரோணா மலைப்பகுதியில் உள்ள மாணிக்யதாரா சுற்றுலாத் தலத்திற்கு மலைப்பயணம் மேற்கொண்டனர்.

இதையும் படிக்க: ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்.. கேரளத்தில் சுவாரஸ்ய சம்பவம்!

மலைப்பகுதியில் மாயமான சிறுமி:

அன்று மாலை 6 மணியளவில் இருட்டத் தொடங்கிய நேரத்தில், ஸ்ரீ நந்தா திடீரென மாயமானார். குடும்பத்தினர் அவரைத் தேடியும் கிடைக்காததால், உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தனர். சிறுமி மாயமான செய்தி அறிந்ததும், கர்நாடகக் காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் அதிநவீன உபகரணங்களுடன் தேடுதல் பணியில் இறங்கினர். அடர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகளில் கயிறுகள் மூலம் வீரர்கள் இறங்கித் தேடினர்.

சிறுமி சடலமாக கண்டெடுப்பு:

இரவு நேரங்களில் தேடுவதற்கு ஏதுவாகத் தெர்மல் கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், ஆரம்பகட்ட தேடுதலில் எந்தத் தடயமும் கிடைக்காதது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. நான்கு நாட்கள் நீடித்த தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இன்று காலை மாணிக்யதாரா காட்சி முனையிலிருந்து சுமார் 1,500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமி மரணத்தில் சந்தேகம்:

சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறும் அவரது குடும்பத்தினர், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறுகையில், “சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது ஒருவருடன் சென்றிருக்கலாம் எனப் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. எனினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்” என்றார்.

இதையும் படிக்க: மனைவியை கொலை செய்து இறந்த உடலுடன் இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நபர்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!

காவல்துறை விசாரணை தீவிரம்:

சிறுமியின் பெற்றோர் பயன்படுத்திய மொபைல் போன்களைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அனைத்து கோணங்களிலும் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். சிறுமி மலையிலிருந்து தவறி விழுந்தாரா அல்லது அவரது மரணத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான், இதேபோலக் கர்நாடகாவில் மலைப்பயணம் சென்ற கேரளாவைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் ஒருவர் மாயமாகி, நான்கு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். அந்தச் சம்பவம் மகிழ்ச்சியில் முடிந்த நிலையில், சிறுமி ஸ்ரீ நந்தாவின் மரணம் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us