கிரிவலத்துக்கு திருவண்ணாமலை போறீங்களா? பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!
Tiruvanamalai Pournami Special Train : பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக 2025 அக்டோபர் 6ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.

திருவண்ணாமலை, அக்டோபர் 02 : திருவண்ணாமலை கிரிவலத்தையொட்டி, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பௌர்ணமி என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் நடக்கும் பவுர்ணமி கிரிவலம் தான். சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலம் பாதையில் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுககு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, பவுர்ணமி நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில், 2025 அக்டோபர் 6ஆம் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. இதனை யொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். திருவண்ணாமலை கோயிலுக்கு பின்புறம் உள்ள தீபமலையில் கிரிவலம் நடைபெறுகிறது. கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்டங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Also Read : குலசை தசரா திருவிழா… சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கிருந்து தெரியுமா?
கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
🚉 Travel Made Easy this Pournami!
Unreserved MEMU Special Trains between Villupuram and Tiruvannamalai will run on 6th Oct 2025 for Girivalam devotees.#SouthernRailway pic.twitter.com/vx015vXZms
— Southern Railway (@GMSRailway) October 2, 2025
2025 அக்டோபர் 6ஆம் தேதி விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் எண் 06130 விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கத்தில், ரயில் எண் 06129 திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
Also Read : விக்கிரவாண்டியில் சோகமாக மாறிய சுற்றுலா.. கார் தீப்பிடித்து 3 பேர் பலி
இந்த ரயில் வெங்கடேசபுரம், மாபல்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், அடிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவக்கரையூர், அடுக்கஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் 8 பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.