Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரங்கள்!

Wheels Detached From Moving Government Bus | திண்டுக்கல்லில் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த அரசு பேருந்தில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் யாருக்கும் எந்த விதமான பெரிய சிக்கலும் இந்த விபத்தில் ஏற்படவில்லை.

சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரங்கள்!
பேருந்து விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Oct 2025 09:02 AM IST

திண்டுக்கல், அக்டோபர் 02 : திண்டுக்கல்லில் (Dindigul) சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரங்கள்  கழன்று ஓடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் வெறும் 8 பயணிகள் மட்டுமே பயணம் செய்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் ஓடிக்கொண்டு இருந்த பேருந்தில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓடும் பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள்

திண்டுக்கல்லில் செப்டம்பர் 30, 2025 அன்று காலை 10 மணியளவில் வேடசந்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் வெறும் 8 பயணிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் பேருந்து கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென பேருந்தின் பின்பக்கத்தில் இருந்த இரண்டு சக்கரங்கள் கழன்று ஓட தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க : ஐஏஎஸ் படிக்க வைக்க உதவி.. பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த பெண்!

பள்ளத்தில் விழுந்த டயர்கள் – அலறிய பொதுமக்கள்

பேருந்தின் பின் பக்கத்தில் இருந்து கழன்ற சக்கரங்களில் ஒன்று பேருந்தை முந்துக்கொண்டு முன்னே சென்று சாலையோர பள்ளத்தில் விழுந்துள்ளது. மற்றொரு சக்கரம் சாலையின் பின்பக்கத்தில் சாலையோர பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனால் பின்பக்கம் இருந்த இரண்டு சக்கரங்களும் கழன்று ஓடிய நிலையில், பேருந்து சில தூரம் இழுத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிய பயணைகள் கத்தி கூச்சலிட தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : தலைக்கேறிய போதை.. சென்னையில் கணவனை கொன்ற மனைவி!

பத்திரமாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்

பேருந்து சக்கரங்கள் இல்லாமல் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அதன் தீவிரத்தை உணர்ந்த ஓட்டுநர், பேருந்தை பத்திரமாக சாலையோரம் நிறுத்தியுள்ளார். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பேருந்துகளை முறையாக பராமரிக்கவும், பழைய பேருந்துகளை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.