Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தலைக்கேறிய போதை.. சென்னையில் கணவனை கொன்ற மனைவி!

Chennai Crime News: சென்னை சைதாப்பேட்டையில் மதுபோதையில் வட மாநிலத் தொழிலாளர் தம்பதி சண்டையிட்ட நிலையில் அது கொலையில் முடிந்துள்ளது. உடன் பணியாற்றும் பப்லுவுடன் மனைவி பிங்கி நெருக்கம் காட்டுவதாக கணவர் பிரகலாத சர்தார் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. கைகலப்பில், பிங்கி கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

தலைக்கேறிய போதை.. சென்னையில் கணவனை கொன்ற மனைவி!
சைதாப்பேட்டையில் கொலை சம்பவம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 01 Oct 2025 08:18 AM IST

சென்னை, அக்டோபர் 1: சென்னையில் தலைக்கேறிய மதுபோதையால் கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்கி பல்வேறு தொழில்களில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வரும் வழியில் அதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத சர்தார் என்பவரும் அவரது இரண்டாவது மனைவியான பிங்கி என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

பிரகலாத சர்தாரின் முதல் மனைவி உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிங்கியை திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் கடந்த ஒரு மாத காலமாக சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளி வளாகத்தை தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே கணவன், மனைவி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

Also Read: பக்கா ஸ்கெட்ச் – ஆன்லைனில் ஆயுதம் ஆர்டர்.. தேனிலவு கொலையில் திடுக் தகவல்கள்!

இப்படியான நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணி முடிந்த பிறகு பிரகலாத சர்தார் மற்றும் பிங்கி இருவரும் மது அருந்தியுள்ளனர். முன்னதாக பிங்கிக்கும் இவர்களுடன் பணியாற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பப்லு என்பவருக்கும் இடையே தவறான பழக்கம் இருப்பதாக பிரகலாத சர்தார் நினைத்துள்ளார். பப்லுடன் பிங்கி நெருங்கி பழகுவதை கண்டித்துள்ளார்.

இதற்கிடையில் பப்லுவுடன் சேர்ந்து பிங்கி அருகில் இருந்த மார்க்கெட்டிற்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நேற்று முன்தினம் வாங்கி வந்துள்ளார். இதனைப் பார்த்த பிரகலாத சர்தார் மது அருந்தும்போது கண்டித்தார்.  இதனால் கணவன் மனைவிக்கு இடையே முதலில் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் பிரகலாத சர்தார் ஆத்திரத்தில் தனது மனைவி பிங்கியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பிய பிங்கி பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து பிரகலாத சர்தாரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சர்தார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து வலியால் அலறியுள்ளார்.

Also Read: இரண்டு திருமணம் ஓவர்.. மூன்றாவதாக தொடர்பு.. மகளை கொன்ற தந்தை!

இதனை கேட்டு அங்கு பணியாற்றும் சக தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வந்து அவரை மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் காயத்திற்கு எந்த கட்டும் போடாமல் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே கத்திக்குத்து விழுந்த இடத்தில் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் சர்தார் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார். இதன் பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குமரன் நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கணவனை கொன்ற பிங்கியை கைது செய்தனர்