Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Meghalaya Murder Case : பக்கா ஸ்கெட்ச்… ஆன்லைனில் ஆயுதம் ஆர்டர்.. தேனிலவு கொலையில் திடுக் தகவல்கள்!

Indore Businessman Murder : இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் மற்றும் காதலன் ராஜ் குஷ்வாஹா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணமான ஐந்து நாட்களில் சோனம் தனது காதலனுடன் சேர்ந்து ராஜாவைக் கொலை செய்துள்ளார்.

Meghalaya Murder Case : பக்கா ஸ்கெட்ச்… ஆன்லைனில் ஆயுதம் ஆர்டர்.. தேனிலவு கொலையில் திடுக் தகவல்கள்!
இந்தூர் கொலை விவரங்கள்
C Murugadoss
C Murugadoss | Updated On: 10 Jun 2025 09:24 AM

மத்தியப் பிரதேசம் இந்தூரின் போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. முக்கிய குற்றவாளியான மனைவி சோனம் ரகுவன்ஷியை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் வட்டாரங்களின்படி, சோனம் ரகுவன்ஷி தனது காதலனுடன் சேர்ந்து குற்றத்திற்கான முழு சதித்திட்டத்தையும் தீட்டியதாக கூறப்படுகிறது. திருமணமான 5 நாட்களுக்குப் பிறகு, ராஜா ரகுவன்ஷியின் கொலைக்கான முழு ஸ்கிரிப்டையும் சோனம் தயாரித்துள்ளார். அவர்தான் இந்த கொலையில் மாஸ்டர்மைண்டாக இருந்துள்ளார்

ராஜாவும் சோனமும் 2025, மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தில் மகிழ்ச்சியில் திளைக்க எல்லாம் வழக்கம்போல்தான் இருந்துள்ளது. ஆனால் போலீஸ் வட்டாரங்களின்படி, 2025, மே 16 அன்று, சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து ராஜாவை கொல்ல ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதாவது திருமணம் முடிந்து 5 நாட்களில். அதாவது கணவன் ராஜாவைக் கொன்று ஒரு கொள்ளைக் கதையை உருவாக்குவோம் என்றும், பிறகு தான் விதவையாகிவிடுவேன், எனவே தன் தந்தையும் மறுமணத்தை ஆதரிப்பார். காதலனை கரம் பிடிக்கலாம் என்பதே சோனமின் திட்டமாக இருந்துள்ளது

கொலைக்காக ஆன்லைனில் ஆயுதம்

போலீஸ் தகவலின்படி, ராஜா கொலை செய்யப்பட்ட கோடாரி , குவஹாத்தியில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பவத்திற்கு சற்று முன்பு சோனமின் தங்குமிடத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். சோனம் அவர்களுக்கு லொகேஷனை அனுப்பி தொடர்பில் இருந்துள்ளார். குற்றத்தைச் செய்ய குற்றவாளிகளுக்கு ரூ.50,000 ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

மேகலாயா முதலமைச்சரின் விளக்கம்

சினிமா பாணியில் தப்பிக்க பிளான்

2023, மே 23 அன்று ராஜா கொலை செய்யப்பட்டார். அதே நாள் மாலையில் சோனம் ஷில்லாங்கிலிருந்து குவஹாத்தியை அடைந்தார். அங்கிருந்து ரயிலில் ஏறி வாரணாசி வழியாக காஜிப்பூர் சென்றார். இந்த நேரத்தில், காவல்துறையினரால் அவளைக் கண்டுபிடிக்க முடியாதபடி அவர் தனது மொபைல் போனை உடைத்துள்ளார் ஆனால் அதற்குமுன்னர் அவர் பேசிய அழைப்புகளை சல்லடை போட்ட போலீசார் ராஜ் குஷ்வாஹாவை இந்தூரில்கைது செய்தனர்.சக கொலையாளி சிக்கியதை அடுத்து உபி.யில் சரணடைந்துள்ளார் சோனம்

திருமணம் டூ கொலை

சோனமும் ராஜா ரகுவன்ஷியும் மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு திருமண தளம் மூலம் தொடர்பு கொண்டனர். இதன் பிறகு சோனமும் ராஜாவும் தங்கள் தேனிலவுக்காக மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கிற்குச் சென்றனர். ராஜா அங்கு கொலை செய்யப்பட்டார், அவரது உடல் ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. 17 நாட்களுக்குப் பிறகு இந்தக் கொலை வழக்கை போலீசார் தீர்த்து வைத்துள்ளனர். ராஜாவின் கொலையைச் செய்வதில் ராஜ் குஷ்வாஹா சோனமுக்கு பெரிதும் உதவினார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.