Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியில் இவர்கள் 20 பேர் தான் போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil Season 9 : சின்னத்திரையில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியில் இவர்கள் 20 பேர் தான் போட்டியாளர்கள்!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2025 23:46 PM IST

இந்த 2025-ம் ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று முதல் பிரமாண்டமாக ஒளிப்பரப்பானது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதிதான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிறார். கடந்த 7-வது சீசனில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பல மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த காண்டு பாய்ஸ் விர்சஸ் கேர்ள்ஸ் என்ற கான்செப்டில் இந்தப் போட்டி ஒளிபரப்பானது. தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே போட்டி வைக்கப்பட்டு அதில் ஜெயிப்பவர்களுக்கு பல சலுகைகளும் தோற்பவர்களுக்கும் பல சிக்கல்களும் இருக்கும். இப்படி தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே இருக்கும் போட்டி வலுத்து பிறகு முடியும் தருவாயில் தனித்தனியாக விளையாட அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி அந்த சீசனில் ஆண்கள் அணியில் இருப்பவர் வெற்றியடைவாரா அல்லது பெண்கள் அணியில் இருப்பவர் வெற்றியடைவாரா என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஆண்கள் அணியில் இருந்து முத்துகுமரன் தான் டைட்டிலை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சீசனில் ஆண்கல் மற்றும் பெண்கள் என்று இல்லாமல் இரண்டு நிறங்கள் கொடுக்கப்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தமிழ் 9 போட்டியில் இவர்கள் 20 பேர் தான் போட்டியாளர்கள்:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக திவாகர், அரோரா, எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி திரு, சபரிநாதன், பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்‌ஷா குமார், பிரவீன் ராஜ் தேவ், அப்சரா, கம்ருதின், நந்தினி, கலையரசன் என 20 போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் உள்ள பல மாற்றங்களைப் பார்த்து போட்டியாளர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் நாளை முதல் இந்த நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழுவின் எக்ஸ் தள பதிவு: