Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரோரா குறித்த தவறான எண்ணம் மாறனும் – ரியா சொன்ன விசயம்!

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த்ப போட்டியில் இரண்டாவது போட்டியாளராக இன்ஸ்டாகிராம் பிரபலம் அரோரா சின்க்ளேர் களமிறங்கியுள்ள நிலையில் அவரைக் குறித்து அவரது தோழி ரியா மிகவும் உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.

அரோரா குறித்த தவறான எண்ணம் மாறனும் – ரியா சொன்ன விசயம்!
அரோரா- ரியாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2025 19:27 PM IST

தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss tamil season 9) நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. பிரமாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது தொடர்ந்து போட்டியாளர்களை அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்து வருகிறார் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக யூடியூப் பிரபலம் வாட்டர்மெலன் திவாகர் எண்ட்ரி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக இருக்கும் மாட்ல் அரோரா சின்க்ளேர் இரண்டாவது போட்டியாளராக எண்ட்ரி கொடுத்துள்ளார். சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்தும் பலருக்கும் இந்த அரோரா சின்க்ளேர் யார் என்பது நன்கு தெரியும். இவரை நிகழ்ச்சிக்கு வரவேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் சேதுபதி அனுப்பி வைத்தார்.

அதன்படி அரோரா சின்க்ளேர் தனது அறிமுக வீடியோவில் தான் எப்படி மாடலிங் துறையை தேர்வு செய்தேன் என்பது குறித்து பேசியிருந்தார். மேலும் தனக்கு பல நண்பர்கள் இருந்தாலும் அவருடைய நம்பிக்கைக்குரிய நண்பர்கள் சிலரே என்று தெரிவித்து இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டது கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்கார்ட் கண்டெஸ்டண்டாக பங்கேற்ற ரியா தியாகராஜன் குறித்துதான்.

அரோராவின் டேக் லைன் மக்களிடையே மாறவேண்டும்:

தொடர்ந்து அரோராவை வீட்டிற்குள் அனுப்பிவைத்த விஜய் சேதுபதி அவரைக் குறித்து அவரது தோழி ரியாவிடம் பேசினார். அப்போது பேசிய ரியா இது அரோராவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரோராவை வேறு ஒரு பெயரில் தான் அனைவரும் அடையாளப்படுத்துவார்கள்.

என்னிடம் பேசும் பலரும் அந்த பெயரை குறிப்பிட்டு அவருடைய தோழி என்றே கூறுவார்கள். ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அரோராவை மக்கள் அரோரா என்றே அடையாளப்படுத்துவார்கள். என்னையும் அரோராவின் தோழி என்று குறிப்பிடுவார்கள் அது எனக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்து இருந்தார். மேலும் அரோராவை சமூக வலைதளத்தில் சில அவர் உடல் அமைப்பை வைத்து பெயரிடுவது குறித்தே ரியா குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரோரா குறித்த அறிமுக வீடியோவை வெளியிட்ட நிகழ்ச்சி குழு: