Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

5 ஆண்டுகளாக தொடரும் பகை – நடிகையை வீடு புகுந்து செருப்பால் அடித்த நபர் – பரபரப்பு சம்பவம்

Meenakshi Govindarajan : டிமாண்டிக் காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

5 ஆண்டுகளாக தொடரும் பகை – நடிகையை வீடு புகுந்து செருப்பால் அடித்த நபர் – பரபரப்பு சம்பவம்
மீனாட்சி கோவிந்தராஜன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Oct 2025 22:12 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரலமானவர் மீனாட்சி கோவிந்தராஜன். இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் (Sasikumar) நடித்த கென்னடி கிளப் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து வேலன், விக்ரமின் கோப்ரா, டிமான்டிக் காலனி ஆகிய படங்களில் நடித்தார். இதில் இவருக்கு டிமாண்டிக் காலனி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் அவரை அக்டோபர் 10, 2025 அன்று  மர்ம நபர் ஒருவர் அவரது வீடு புகுந்து செருப்பால் அடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக  பழி தீர்ப்பதற்காக அந்த நபர் இந்த செயலில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நடிகையை செருப்பால் அடித்த மர்ம நபர்

சென்னை ஆலப்பாக்கத்தில் வசிக்கும் பிரபல நடிகை மீனாட்சி கோவிந்தராஜனின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரையும் அவரது அம்மாவையும் செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகை அளித்த புகாரில் காவல்துறையினரால் ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பகையின் காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

இதையும் படிக்க : கார் பறிமுதல் வழக்கில் துல்கர் சல்மானின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

இதனையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிமாண்டிக் காலனி 3

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் டிமாண்டிக் காலனி. சென்னையில் இதே பெயரில் உள்ள ஒரு இடம் குறித்து கூறப்படும் மர்ம கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமாண்டிக் காலனி 2 என்ற பெயரில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு படத்தை அஜய் ஞானமுத்து இயக்கயிருந்தார்.

இதையும் படிக்க : புஷ்பா 3 படத்திற்கு முன்பாக பிரபல நடிகருடன் இணையும் இயக்குநர் சுகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் 3வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் நடித்த அருள்நிதி, மீனாட்சி கோவிந்தராஜன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.  இதனைத் தொடர்ந்து காதலே காதலே என்ற படத்திலும் மீனாட்சி கோவிந்தராஜன் நடித்து வருகிறார்.