வசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்திரா படம் எப்படி இருக்கு? ஆடியன்ஸ் கருத்து
Indra Movie X Review : நடிகர் வசந்த் ரவி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் இந்திரா. க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து உள்ளனர்.

இயக்குநர் சபரீஷ் நந்தா எழுதி இயக்கி உள்ள படம் இந்திரா. இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் இந்த இந்திரா படத்தில் நடிகர் வசந்த் ரவி (Actor Vasanth Ravi) நாயகனாக நடித்துள்ளார். தரமணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்த இவர் தொடர்ந்து ராக்கி. அஸ்வின்ஸ், ஜெயிலர், பொன் ஒன்று கண்டே, வெப்பன்ஸ் என தொடர்ந்து படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் இன்று 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் இந்திரா. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் மெஹ்ரீன் பிர்சாதா, சுனில், அனிகா சுரேந்திரன், கல்யாண் மாஸ்டர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் கூலி படம் வெளியானதால் தென்னிந்திய சினிமாவில் படங்களில் வரத்து எதுவும் இல்லை. இந்த வாரம் ஒரு சில படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழில் வெளியான இந்திரா படம் பார்த்து ரசிகர்கள் என்ன கருத்தை சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.




இந்திரா படம் குறித்த எக்ஸ் விமர்சனம்:
ஒரு அபார்ட்மெண்ட்டில் நடக்கும் மர்ம கதை, திரில்லர் கதை, பழி வாங்கல் கதை, விறுவிறு கதை என எப்படி வேணாலும் சொல்லலாம். ஒரு சீரியல் கில்லர் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காதல் கதையும் கூட. போலீஸ் விசாரணை, டுவிஸ்ட், சொல்லப்படும் கரு, வில்லன், வசந்த் ரவி, சுனில்,… pic.twitter.com/lgDPDQXxB9
— Meenakshi Sundaram (@meenakshinews) August 20, 2025
ஒரு அபார்ட்மெண்ட்டில் நடக்கும் மர்ம கதை, திரில்லர் கதை, பழி வாங்கல் கதை, விறுவிறு கதை என எப்படி வேணாலும் சொல்லலாம். ஒரு சீரியல் கில்லர் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காதல் கதையும் கூட. போலீஸ் விசாரணை, டுவிஸ்ட், சொல்லப்படும் கரு, வில்லன், வசந்த் ரவி, சுனில், அனிகா நடிப்பு நச், கிளைமாக்ஸ் செம என பதிவிட்டுள்ளார்.
இந்திரா படம் குறித்த எக்ஸ் விமர்சனம்:
#Indra – Decently engaging serial killer thriller with a very interesting, unexpected twist that really makes the second half far more superior than the first. Definitely not your quintessential serial killer film. @iamvasanthravi continues to headline films that aren’t… pic.twitter.com/9Sh6sPCJaJ
— Haricharan Pudipeddi (@pudiharicharan) August 21, 2025
மிகவும் சுவாரஸ்யமான, எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய சீரியல் கில்லர் த்ரில்லர் பட., இரண்டாம் பாதி முதல் பாதியை விட மிகவும் சிறப்பாக இருந்தது. நிச்சயமாக உங்கள் வழக்கமான சீரியல் கில்லர் படம் அல்ல இது என்று இந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… லவ்வர் படத்தில் என் கதாப்பாத்திரத்திற்கு வந்த ரிவியூ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு – கண்ணா ரவி பேட்டி
இந்திரா படம் குறித்த எக்ஸ் விமர்சனம்:
Watched #Indra, a passable crime thriller in which @iamvasanthravi plays a cop Indra who lose his eye sight due to excessive alcoholism. Meanwhile , a serial killer (played by @suneeltollywood) kills one by one. When his own personal life gets affected, Indra goes in search for… pic.twitter.com/8VnAEZTW9Q
— Rajasekar (@sekartweets) August 21, 2025
இந்திரன் படத்தில் அதிகப்படியான குடிப்பழக்கத்தால் கண் பார்வையை இழக்கும் போலீஸ்காரர் இந்திரனாக நடிக்கிறார். இதற்கிடையில், ஒரு தொடர் கொலையாளி ஒருவர் தொடர்ந்து கொலை செய்து வருகிறார். இந்த கொலையில் இந்திரனின் சொந்த வாழ்க்கை பாதிக்கப்படும்போது,அவர் அந்த கொலைகாரனை தேடிச் செல்கிறார். இறுதியில் அவரை கண்டுபிடித்தாரா என்பதே கதை.
இந்திரா படம் குறித்த எக்ஸ் விமர்சனம்:
#Indra [3.5/5] : A good investigative thriller about a series of murders.. Lot of unpredictable twists and turns.. Keeps you engaged from start to end..
@iamvasanthravi has given an excellent performance as Cop.. @Mehreenpirzada looks beautiful and has done a neat job..… pic.twitter.com/dOujfOztl3
— Ramesh Bala (@rameshlaus) August 21, 2025
தொடர் கொலைகளைப் பற்றிய ஒரு நல்ல புலனாய்வு த்ரில்லர்.. எதிர்பாராத திருப்பங்கள் நிறைய.. ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை படத்துடன் ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Also Read… ஷூட்டிங்கில் ரஜினியைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் – நடிகை சிம்ரன் பேச்சு!