Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jana Nayagan : தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட பர்ஸ்ட் சிங்கிள்.. அனிருத் செய்யும் தரமான சம்பவம்!

Jana Nayagan Movie Update : தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமாக உருவாகியிருப்பது ஜன நாயகன். இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் நிலையில், ஜன நாயகன் படத்தின் முதல் பாடலில் சிறப்பான சம்பவம் இருக்கிறதாம். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Jana Nayagan : தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட பர்ஸ்ட் சிங்கிள்.. அனிருத் செய்யும் தரமான சம்பவம்!
விஜய் மற்றும் அனிருத்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Aug 2025 17:04 PM

தளபதி விஜய் (Thalapathy Vijay) மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தில் தளபதி விஜய் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) இப்படத்தில் நடித்துள்ளார். இவர்கள் கூட்டணி பீஸ்ட் படத்துக்கு பிறகு, இரண்டாவது முறையாக இந்த ஜன நாயகன் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஜன நாயகனின் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் “தளபதி வெற்றி கொண்டான்” என்று கூறப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் சுருக்கினால் “TVK” என விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயகன் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துவருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்து சிறப்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் , ஜன நாயன் படத்தின் முதல் பாடலுக்கு இசையமைப்பாளார் அனிருத் நடனமாடவுள்ளாராம். மேலும் இந்த ஜன நாயகன் படத்தை பற்றி அனிருத்தும் அப்டேட் கொடுத்திருகிறார்.

இதையும் படிங்க : எகிறும் எதிர்பார்ப்பு.. சாதனைப் படைத்த மதராஸி ட்ரெய்லர்!

ஜன நாயகன் படம் குறித்து அனிருத் கொடுத்த அப்டேட்

சமீபத்தில் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், “ஜன நாயகன் படத்தின்  வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதராஸி படத்துக்கு பிறகு எனது அடுத்த வேலை அதுதான். சாதாரணமாக விஜய் சாரின் படங்களுக்கு இசையமைத்தாலே அந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகிவிடும். ஏன்னென்றால் அவர் கொடுக்கும் ஒவ்வொரு எக்ஸ்பிரஷனும் அந்த பாடலை ஹிட்டாகிவிடும் . அதைப்போல ஜன நாயன் பட பாடலும் தீவிரமாக தயாராகிவருகிறது” என இசையமைப்பாளர் அனிருத் சிறப்பான அப்டேட்டை கொடுத்திருந்தார். இந்த தகவலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சூரியின் அதிரடி ட்ரான்ஸ்பர்மேஷன்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ஜன நாயன் படம் குறித்து படக்குழு வெளியிட்டிருந்த பதிவு :

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படமானது அதிரடி அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம்.இப்படத்தில் நடிகர்கள் பிரியாமணி, நரேன், மமிதா பைஜூ, மோனிஷா, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாசன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இயக்குனர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ போன்றோர் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2026, ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது