சக்தித் திருமகன் படம் அந்த ஹீரோ பண்ணிருக்கவேண்டியது.. இயக்குநர் அருண் பிரபு சொன்ன நடிகர் யார் தெரியுமா?
Director Arun Prabhu: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் கடந்த 2025 செப்டம்பர் 19ம் தேதியில் வெளியான படம் சக்தி திருக்கமான். இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்து இயக்குநர் அருண் பிரபு பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து படங்களில் ஹீரோ, தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராக பணியாற்றி வருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பிலும் தொடர்ந்து, மாறுபட்ட கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தில் இறுதியாக வெளியான படம் சக்தித் திருமகன் (Shakthi Thirumagan). இந்த திரைப்படமானது கடந்த 2025 செப்டம்பர் 19 ஆம் தேதியில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியிருந்தது . முற்றிலும் அரசியல் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை இயக்குநர் அருண் பிரபு (Arun Prabhu) இயக்கியிருந்தார். இந்த படமானது, திரையரங்குகளில் மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அருண் பிரபு, இப்படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் ? என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதில் அவர், சக்தித் திருமகன் படத்தில் முதன்முதலில் நடிகர் சிலம்பரசன்தான் (Silambarasan) நடிக்கவிருந்தார் என ஓபனாக பேசியுள்ளார். அவர் பேசியது பற்றி விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : வடசென்னை 2 எப்போது தொடங்குகிறது – சூப்பரான அப்டேட் கொடுத்த தனுஷ்!
சக்தித் திருமகன் திரைப்படத்தில் நடிக்கவிருந்த நடிகர் குறித்து இயக்குநர் அருண் பிரபு பேசிய விஷயம்
அந்த நேர்காணலில் தொகுப்பாளர், இயக்குநர் அருண் பிரபுவிடம் “நீங்க சக்தித் திருமகன் படத்திற்கு முன் சிலம்பரசனை வைத்துத்தானே படம் எடுப்பதாக தகவல் வெளியானது, அது உண்மையா? என கேட்டார். அதற்கு பதிலளித்த இயக்குநர் அருண் பிரபு, இந்த சக்தித் திருமகன் படத்தில் சிலம்பரசன்தான் நடித்திருக்கவேண்டியது. ஒரு சில காரணங்களால் அவரால் இந்த படத்தை பண்ணமுடியவில்லை. சிலம்பரசன் இந்த கதையை கேட்டு பிளாஸ்ட் ஆகிட்டாரு. நான் இந்த சக்தித் திருமகன் படத்தை கிட்டத்தட்ட 100 தடவை பலரிடம் கதையை சொல்லியிருக்கிறேன்.
இதையும் படிங்க : சூர்யாவின் கருப்பு படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!
சக்தித் திருமகன் படம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Thank you all ❤️ #ShakthiThirumagan running successfully in theatres pic.twitter.com/s4DqV5ckuZ
— vijayantony (@vijayantony) September 24, 2025
அதில் மிகவும் பிளாஸ்ட்டான தருணம் என்றால் அது நடிகர் சிலம்பரசனுக்கு கதையை சொல்லும்போதுதான். இந்த கதையை அவர் என்னிடம் கேட்கும்போது, ஒரு ரசிகன் படத்தை இருக்கை நுனியில் அமர்ந்து பார்ப்பதுபோல், என்னிடம் இந்த சக்திதிருமகன் படத்தின் கதையை கேட்டாரு” என இயக்குநர் அருண் பிரபு ஓபனாக பேசியிருந்தார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.