Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shakthi Thirumagan: விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ படம் எப்படி இருக்கு? வெளியான ‘எக்ஸ்’ விமர்சனம்

Shakthi Thirumagan Movie X Review: தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் 25வது படமாக உருவாகியிருப்பது சக்தித் திருமகன். இந்த படமானது இன்று 2025 செப்டம்பர் 19ல் வெளியாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Shakthi Thirumagan: விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ படம் எப்படி இருக்கு? வெளியான ‘எக்ஸ்’ விமர்சனம்
சக்தித் திருமகன் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Sep 2025 15:24 PM IST

நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) 25வது படமாக இன்று, 2025 செப்டம்பர் 19ல் வெளியாகியிருப்பது சக்தித் திருமகன் (Shakthi Thirumagan). இந்த படமானது முற்றிலும் அரசியல் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வழக்கறிஞராக நடித்திருக்கும் நிலையில், அவர் குற்றங்களை எவ்வாறு தடுக்கிறார் என்பதுதான் இப்படத்தின் மைய கருத்து. இந்த படத்தில் விஜய் ஆண்டனி வெறும் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் போன்ற பணிகளையும் செய்திருக்கிறார். இந்த சக்தித் திருமகன் படத்தை இயக்குநர் அருண் பிரபு (Arun prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை த்ரிப்தி ரவிந்திரா (Trupthi Ravindra) நடித்துள்ளார். இப்படம் இவருக்கு தமிழ் அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சக்தித் திருமகன் படமானது இன்று 2025 செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமான வெளியாகியிருக்கும் நிலையில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்!

சக்தித் திருமகன் படத்தின் விஜய் ஆண்டனியின் பணி :

நடிகர் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார். இது அவரின் 25வது படம் என்பதால் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு வேலைகளை செய்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு ஏற்றது போலவே அமைந்துள்ளது.

சக்தித் திருமகன் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கு?

இந்த சக்தித் திருமகன் படமானது அரசியல் குற்றம் சார்ந்த கதைக்களம் கொண்ட படமாக வெளியாகியுள்ளது. இதுவரை எந்த படத்திலும் இல்லாதது போல விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் இப்படத்தில் வித்தியாசமாக அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாதி மிகவும் அருமையாகவும் மற்றும் இரண்டாம் பாதி ஓரளவு நன்றாக அமைத்துள்ளதாம்.

இதையும் படிங்க : வின்டேஜ் கதையில் கார்த்தி.. விறுவிறுப்பாக உருவாகும் மார்ஷல்!

மொத்தத்தில் சக்தித் திருமகன் படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா?

விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் இந்த சக்தித் திருமகன் படம் வெளியாகியுள்ளது. இந்த படமானது எதிர்பாராத திருப்பம், அரசியல் க்ரைம், காதல் மற்றும் எமோஷனல் என மாறுபட்ட கதையில் உருவாகியுள்ளது. க்ரைம் திரில்லருடன், காதல் கதை கலந்த படமாக இந்த சக்தித் திருமகன் உள்ளது. நிச்சயமாக திரையரங்கு சென்று ஒருமுறை படத்தை பார்க்கலாம் என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.