கிஸ் முதல் சக்தி திருமகன் வரை… இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Theatre Release Movies: ஒவ்வொரு வாரமும் என்ன படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமாவில் 4 படங்கள் வெளியாக உள்ளது. அதன்படி அவை என்ன என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

கிஸ்: இயக்குநர் சதீஷ் எழுதி இயக்கிய படம் கிஸ். தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருந்த சதீஷ் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனகாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரித்தி அஸ்ரானி நடித்துள்ளார். அவர்களுடன் இணைந்து நடிகர்கள் தேவயானி, விடிவி கணேஷ், பிரபு, ராவ் ரமேஷ், ஆர்.ஜே.விஜய், சக்தி ராஜ், மேத்திவ் வர்கீஸ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் நாளை 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிஸ் படத்தின் ட்ரெய்லர் இதோ:
தண்டகாரண்யம்: இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் அதியன் ஆதிரை. இவரது இயக்கத்தில் தற்போது இரண்டாவதாக உருவாகியுள்ள படம் தண்டகாரண்யம். இந்தப் படத்தில் நடிகர்கள் கலையரசன் மற்றும் தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஷபீர் கல்லரக்கல், ரித்விகா, பால சரவணன், வின்சு சாம், அருள்தாஸ், யுவன் மயில்சாமி சரண்யா ரவிச்சந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




தண்டகாரண்யம் படத்தின் ட்ரெய்லர் இதோ:
படையாண்ட மாவீரன்: இயக்குநர் கௌதமன் எழுதி இயக்கி உள்ள படம் படையாண்ட மாவீரன். இந்தப் படத்தில் அவரே முன்னணி வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து பூஜிதா பொன்னாடா, பி.சமுத்திரக்கனி, பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கௌதமன், சாய் தீனா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் நாளை 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
படையாண்ட மாவீரன் படத்தின் ட்ரெய்லர் இதோ:
சக்தி திருமகன்: நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் சக்தி திருமகன். பொலிடிகல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் அருண் பிரபு எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் கண்ணன். வாகை சந்திரசேகர். செல் முருகன். த்ருப்தி ரவீந்திரன். கிரிஷ் ஹாசன், கிரண் ரத்தோட், ரினி பாட், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத், மாஸ்டர் கேசவ், பிரசாந்த் பார்த்திபன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.