800-வது எபிசோடில் மக்களின் பேராதராவைப் பெற்ற சிறகடிக்க ஆசை – கொண்டாட்டத்தில் சீரியல் குழு!
Siragadikka Aasai: வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு பெற்று வருகின்றதோ அதைவிட அதிகமான வரவேற்பு சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கு இருக்கிறது. இந்த சீரியல் தொடர்ந்து இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் ஒளிபரப்பாகி மக்களுடனே அவர்களும் பயணிக்கின்றனர்.

வெள்ளித்திரையில் உள்ள நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அப்படிதான் சின்னத்திரையில் உள்ள நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை நடிகர்களாக பார்ப்பதைவிட வீட்டில் உள்ள ஒருவராகவே மக்கள் பார்க்கின்றனர் என்றே கூறலாம். அதன்படி தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இடையே தான் டிஆர்பி போட்டியே நிழவும். ஆம் இந்த இரண்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது 800 எபிசோடுகளைக் கடந்துள்ளதாக சீரியல் குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை சீரியல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இரண்டு வருடங்களைக் கடந்த இந்த தொடர் தற்போது 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிப்பரப்பாகி வருகின்றது. அதன்படி இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆர்.சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார், ஸ்ரீ தேவா, சல்மா அருண், பிரணவ் மோகன், ப்ரீத்தா ரெட்டி, மாஸ்டர் அஷ்வின், பாக்யலட்சுமி, ரேவதி, தமிழ் செல்வி, சங்கீதா லியோனிஸ், ஹரிஷ் குமார், ஸ்ருதி நாராயணன், சிபி சக்ரவர்த்தி, லொள்ளு சபா பழனியப்பன், சுதா புஷ்பா, பேபி ஜார்ஜ், மகாதேவன், ஷீலா, ஹாசினி, சரண் ராம் என பலர் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.
800 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்க ஆசை சீரியல்:
பொதுவான சீரியல் டெம்லேட்களே இந்த சீரியலிலும் பயன்படுத்தி இருந்தாலும் நடிகர் வெற்றி வசந்தின் கதாபபத்திரமான முத்து கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் தொடர்ந்து பெற்று வருகின்றது. மிகவும் பிராக்டிகலான நபராக இருக்கும் இவர் சிறு வயதிலே தாய் பாசத்தை இழந்து தவிக்கும் நபராக இருக்கிறார்.




இவருக்கும் நடிகை கோமதி பிரியா சீரியலில் மீனா கதாப்பாத்திரத்தில் நடிப்பவருக்கும் எதிர்பாராதவிதமாக திருமணம் நடைபெறுகிறது. அதன்பிறகு முத்துவின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதே இந்த சீரியலின் கதை. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி சன் டிவி சீரியல்களுடன் டிஆர்பியில் கடுமையாக போட்டிப்போடு சீரியலும் சிறகடிக்க ஆசை சீரியல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறகடிக்க சீரியல் குழு வெளியிட்ட ப்ரோமோ வீடியோ இதோ:
Also Read… நடிகர் ஜெய் நடிக்காமல் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா? அவரே சொன்ன விசயம்