ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்
Madhampatti Rangaraj: நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த சில மாதங்களாக இணையத்தில் அதிகமாக பேசுபொருளாகி உள்ளார். இவருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட நிலையில் தற்போது அவரகளின் பிரச்னை சமூக வலைதளப் பக்கத்தில் அதிக பேசுபொருளாகியுள்ளது.

தமிழகத்தில் ஒரு சமையல் கலைஞராக இருந்து இவ்வளவு பிரபலமாக இருப்பது மாதம்பட்டி ரங்கராஜ் தான். இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக சமையல் தொழிலை செய்துவரும் நிலையில் அதனை மாதம்பட்டி ரங்கராஜ் தான் உலக அளவிற்கு பிரபலமாக மாற்ற முயற்சி செய்தார். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜின் கேட்ரிங்கை தங்கள் வீட்டு விழாவிற்கும் மற்ற விழாவிற்கும் தொடர்ந்து புக் செய்து வருகின்றனர். இப்படி பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பார்ப்பதற்கு சமையல் கலைஞர் போல தோற்றம் அளிக்க மாட்டார். இவர் இரண்டு படங்களில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் தொடர்ந்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
திரையுலக பிரபலங்கள் போல தனது ஆடை மீது அதிக கவனம் செலுத்தக் கூடியவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சமையல் செய்யும் வீடியோவை படம் போல வீடியோ எடுத்து மாஸாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். இப்படி இருக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் திருமணம் நடைப்பெற்றதாக ஜாய் கிரிசில்டா புகைப்படங்களை வெளியிட்டார். இந்த பதிவு வெளியான பிறகு தொடர்ந்து முதல் மனைவியை விவகாரத்து செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என சமூக வலைதளங்கலில் கேள்விகள் எழுப்பப்பட்டது.
ஜாய் கிரிசில்டாவிற்கு மீது வழக்கு தொடர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்:
தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் ஜாய் கிரிசில்டா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக சமீபத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஜாய் கிரிசில்டா ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.
Also Read… Nithya Menen : இதுவரை யாரும் என்னை அப்படி பார்த்திருக்கமாட்டீங்க.. நித்யா மேனன் ஓபன் டாக்!
அதில், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தனிப்பட்ட பிரச்சனையில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை குறித்து தொடர்ந்து ஜாய் கிரிசில்டா பேசி வருவதாகவும் அவர் அவ்வாறு பேச தடை விதிக்க வேண்டும் என்றும் ஜாய் கிரிசில்டா கருத்தால் சுமார் 12.5 கோடி ரூபாய் பாகசாலா நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜாய் கிரிசில்டாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… தனுஷே ஓகே சொல்லிட்டாரு.. மேடையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!