AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அவள் உலக அழகியே… இணையத்தில் வைரலாகும் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Actress Nazriyas latest photos Viral On Social Media: மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா நசீம். இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அவள் உலக அழகியே… இணையத்தில் வைரலாகும் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
நடிகை நஸ்ரிய நசீம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 May 2026 20:29 PM IST

மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா நசீம். இவர் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாகாவே குழந்தையாக இருக்கும் போதே தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மலையாள மக்களிடையே பரிச்சையம் ஆனார். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் மம்முட்டியின் நடிப்பில் வெளியான பளுங்கு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் நடிகை நஸ்ரியா நசீம். தொடர்ந்து 2010-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா நசீம் அதனைத் தொடர்ந்து படங்களில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மேட் டாட் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்கத் தொடங்கினார் நடிகை நஸ்ரியா.

தொடர்ந்து மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா நசீம் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி 2013-ம் ஆண்டு வெளியான நேரம் என்ற படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் உருவாகி இருந்த நிலையில் அந்தப் படத்தில் இருந்தே நஸ்ரியாவிற்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்:

தொடர்ந்து நடிகை நஸ்ரியா நசீம் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வந்த நிலையில் அதிக அளவில் மலையாள சினிமாவில் தான் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை நஸ்ரியா நசீம் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் சூர்யா 47. இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழி ரசிகர்களுக்காகவும் எடுக்கப்பட்டு வருகின்றது. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இவர்களின் ஜோடி இந்தப் படத்தில் தான் இணைந்துள்ளது. இந்த நிலையில் நடிகை நஸ்ரியா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Rashmika Mandanna: டோக்கியோவில் இந்திய நடிகை.. சர்வதேச மேடையில் ராஷ்மிகாவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

நடிகை நஸ்ரியா நசீம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

Also Read… Suriya: ரசிகர்கள் கொண்டாடும் கருப்பு பட கிளைமேக்ஸ்.. எனது உதவியாளர் சொன்ன ஐடியா! – சூர்யா பகிர்ந்த தகவல்!

Follow Us