AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டோவினோ தாமஸ் – நஸ்ரியா ஜோடியாகும் புது படம்.. டைட்டில் என்ன தெரியுமா?

Tovino - Nazriya New Movie: மலையாளம் சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ். இவர் தற்போது நடிகை நஸ்ரியாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். தற்போது இவர்கள் இருவரும் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

டோவினோ தாமஸ் – நஸ்ரியா ஜோடியாகும் புது படம்.. டைட்டில் என்ன தெரியுமா?
டோவினோ தாமஸ் - நஸ்ரியாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 May 2026 11:38 AM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ் (Tovino Tomas). இவர் மலையாளம் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் நிலையில், தமிழ், கன்னடம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar)நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக தற்போது டோவினோ தாமஸ் பூர்த்தியை திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடித்துவருகிறார். இந்த புதிய படத்தை இயக்குநர் முஹ்ஸின் பராரி (Muhsin Parari) இயக்கும் நிலையில், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் (Sushin Shyam) இசையமைக்கிறார்.

அந்த வகையில் இன்று 2026 மே 11ம் தேதியில், இப்படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு “கிரேசியாஸ் எல் கிளாசிகோ” (Gracias El Classico) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது ஸ்போர்ட்ஸ் மற்றும் காதல் போன்ற கதைக்களத்தில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் ஹீரோ இப்போ CM.. படம் சீக்கிரம் வரும் – ஜன நாயகன் பட தயாரிப்பாளர் பேச்சு!

நஸ்ரியாவுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்து டோவினோ தாமஸ் வெளியிட்ட பதிவு:

நஸ்ரியா நசீம் மற்றும் டோவினோ தாமஸ் இணைந்து நடிக்கும் படம்

டோவினோ ஏற்கனவே இயக்குநர் முஹ்ஸின் பராரி இயக்கத்தில் தல்லுமாலா என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு கிரேசியாஸ் எல் கிளாசிகோ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மிகவும் வித்த்தியாசமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில், ஸ்பெயினில் நாட்டில் கேம்ப் நெள மைதானத்தில் நடந்த, பார்சிலோனா- ரியல் மாட்ரி எல் கிளாசிகோ போட்டியிலன் நடுவே, இந்த புது படத்தின் டைட்டிலை நஸ்ரியா மற்றும் டோவினோ தாமஸ் இணைந்து வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா சாரின் அந்த படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும் – சாய் அபயங்கர் பேச்சு!

போட்டியின் நடுவே இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கும் நிலையில், அது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது. இப்படமும் கால்பந்து மற்றும் காதலை குறித்த கதைக்களத்தில் இருக்கலாமா என கூறப்படுகிறது. நடிகை நஸ்ரியா ஏற்கனவே இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக சூர்யா47 படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து இந்த கிரேசியாஸ் எல் கிளாசிகோ படத்தில் இணைந்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us