AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு – அப்டேட் இதோ

Sigma Movie Release Update Here : நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் சிக்மா. இந்தப் படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்து ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு – அப்டேட் இதோ
சிக்மாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2026 11:23 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில்  வாரிசுகளின் வருகை என்பது தற்போது எல்லாம் சாதாரமாகவும் இயல்பானதாக மாறிவிட்டது. மேலும் அப்படி வாரிசுகளின் வருகை சினிமாவில் இல்லை என்றால் தான் ஆச்சரியப்படும் விதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி தமிழ் சினிமாவில் உச்சத்தி இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ள ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் முன்னதாக நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படதில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். அந்தப் பாடம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களிடையே அதிக அளவில் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெளி நாட்டிற்கு சென்று சினிமா தொடர்பான படிப்பை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் தமிழகத்திற்கு வந்த ஜேசன் சஞ்சய் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் இயக்குநராக பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் இயக்கும் படத்தை லைக்கா புரடெக்‌ஷன் தயாரிக்கும் நிலையில் நடிகர் சந்தீப் ரெட்டி நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்த சிக்மா படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டே இருந்த நிலையில் தற்போது முடிவடைந்து வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் 31-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அர்ஜுன் தாஸ் திருமணம் தொடர்பாக வைரலான தகவல் – விளக்கம் கொடுத்த அர்ஜுன் தாஸ் தரப்பு

லைகா புரடெக்‌ஷன்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ – சிம்பு கூட யார் இருக்காங்க தெரியுமா?

Follow Us