வரலாற்று சிறப்புமிக்க வெற்றி… போஸ்டர் வெளியிட்டு கொண்டாடும் கருப்பு படக்குழு
Karuppu Movie Success | நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கருப்பு. இந்தப் படத்தின் வெற்றியை ரசிகர்களும் படக்குழுவினரும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் இந்த 2026 ஆண்டு மே மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது கருப்பு. இந்தப் படம் இந்த ஆண்டில் முதலாவதாக திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் இந்திரன்ஸ், அனகா மாயா, நட்டி நடராஜன், சிவாத, சுவாசிகா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து உள்ளார். மேலும் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் இவரின் கதப்பாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வருகின்றது.




கருப்பு படத்தின் வெற்றியை போஸ்டர் வெளியிட்டு கொண்டாடும் படக்குழு:
மேலும் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று நடிகர் சூர்யா இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உட்பட படக்குழுவினர் சிலருக்கு புதிய கார் பரிசளித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது கருப்பு படக்குழு இது ஒரு வரலாற்று வெற்றி என்று தெரிவித்துள்ளது. மேலும் கருப்பு படம் உலக அளவில் 300 கோடிகளை வசூலித்துள்ள நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை எந்த படமும் வசூலிக்காத அளவிற்கு அதிக அளவில் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… கருப்பு படத்திலிருந்து வெளியானது ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The historic box office rampage continues in theatres 💥#Karuppu – The One @Suriya_offl‘s mega blockbuster, on the big screens now.
A feast by @RJ_Balaji and team.
A @SaiAbhyankkar Musical.
A @dop_gkvishnu Visuals.#KaruppuBlockbuster #VeeraBhadrudu @trishtrashers @prabhu_sr… pic.twitter.com/Go3QaIbSul— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 1, 2026
Also Read… நடிகர் அஜித்தின் தாயார் மறைவு – முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி